Home NEWS பள்ளி என்பது நீங்கள் என்ன அணியவேண்டும் என்பதை தேர்ந்து எடுக்கும் இடம் அல்ல பாஜக நிர்வாகி...

பள்ளி என்பது நீங்கள் என்ன அணியவேண்டும் என்பதை தேர்ந்து எடுக்கும் இடம் அல்ல பாஜக நிர்வாகி குஷ்புவின் கருத்து..!!!

kushbhu opnion about hijab ban

கர்நாடகாவில் உள்ள பியூ கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம் மக்கள் ஹிஜாப் அணிவதை வழக்கமாக வைத்துள்ளனர் அது அவர்களின் தனிப்பட்ட உரிமை. பல வருடங்களாக ஹிஜாப் அணிந்து தான் அவர்கள் வெளியில் வருகிறார்கள் பள்ளிக்கு செல்கிறார்கள் கல்லூரிக்கு செல்கிறார்கள் தற்போது கர்நாடகாவில் உள்ள பியூ கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வர திடீர் தடை செய்யப்பட்டுள்ளது மாணவர்கள் அனைவரும் சீருடை அணிந்து தான் வர வண்டும் ஹிஜாப் அணியக் கூடாது என்று தடை விதித்துள்ளனர்.

சமீபத்தில் பெண்ணொருவர் ஹிஜாப் அணிந்து கொண்டு கல்லூரிக்குள் நுழையும் போது ஹிஜாப் அணிந்து வந்ததால் எதிராக சில ஹிந்துத்துவா மாணவர்கள் அந்தப் பெண்ணிடம் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கம் கொடுக்க அந்தப் பெண் பதிலுக்கு அல்லாஹு அக்பர் என்று கூறி அவர்களை எதிர்த்து நின்றார்.

அந்தப் பெண்ணின் தைரியத்திற்கு பல தரப்பிலிருந்து பாராட்டுக்கள் வர ஹிஜாப் அணிவது அவரவர் விருப்பம் இதில் தலையிட கூடாது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள் மக்கள்.

இந்த நிலையில் பாஜக நிர்வாகி குஷ்பு அவர்கள் இந்த விஷயத்தில் அவரது கருத்தைப் பதிவிட்டுள்ளார் அதில் பள்ளி என்பது நீங்கள் என்ன அணிய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் இடம் அல்ல. இது ஒழுக்கம் நிறைந்த இடம்.

ஒவ்வொரு கல்வி நிறுவனமும் கற்றலில் ஒற்றுமையையும் மரியாதையையும் காட்ட ஒரு விதியைக் கொண்டிருக்க வேண்டும்.

நீங்கள் வெளியில் என்ன உடுத்துகிறீர்கள் என்பது உங்கள் விருப்பம். பள்ளிகளில் நடத்தை விதிகளை மதிக்க வேண்டும். கற்றலை மதிக்கவும் என்று கூறியுள்ளார் அதாவது பள்ளிக்கு சீருடை அணிந்து வர வேண்டும் என்பதை குறிப்பிட்டு உள்ளார்.

Exit mobile version