Home NEWS ஹிஜாப் அணிய தடை இனி இது தொடர்ந்தால் நாங்க அத்தனை பேரும் ஹிஜாப் அணிந்து வெளியில்...

ஹிஜாப் அணிய தடை இனி இது தொடர்ந்தால் நாங்க அத்தனை பேரும் ஹிஜாப் அணிந்து வெளியில் வருவோம் லட்சுமி ராமகிருஷ்ணன் கொடுத்த எச்சரிக்கை.

hijab issue lakshmi ramakrishnan opentalk

லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு தன்னுடைய கருத்தினை பயப்படாமல் தெரிவித்து வருபவர். தற்பொழுது ஹிஜாப் அணிய கூடாது என்று விதிக்கப்பட்டிருக்கும் தடையை பற்றி முதன்முதலாக மனம் திறந்து பேசியிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியது கர்நாடகாவில் நடக்கிற ஹிஜாப் விஷயம் இந்த வீடியோ எல்லாம் பார்க்கும்போது ரொம்ப ரொம்ப கவலையா இருக்குது இன்னிக்கு ஒரு வீடியோ பார்த்தேன் நான் ஒரு பெண்ணா நிறைய பசங்க அவளை சுத்தி வளைச்சி பேசுகிறார்கள் அந்த பெண்ணும் திரும்ப பேசுற. இது என்ன துன்புறுத்தல் இது.

நானும் ஒரு முஸ்லிம் நாட்டில் 22 வருடங்கள் இருந்திருக்கிறேன் அதனால்தான் சொல்கிறேன் ஹிஜாப் போட்டு பழகியவர்கள் அதுவும் அவர்கள் விருப்பப்படி போட்டு பழகியவர்களிடம் ஹிஜாப் அணியக்கூடாது என்று சொல்வது அவமானப்படுத்துவதில் சமம்.

சின்னப் பசங்களோட மனச கெடுக்கிறது ரொம்ப ரொம்பத் தவறான விஷயம் இதனை கடுமையாக கண்டிக்கிறேன் ஒரு குடிமகனாக. இளைஞர்களை இப்படி கையாளா கூடாது பெற்றோர்களே இந்த செயலில் ஈடுபட்ட பசங்களை கண்டியுங்கள் இதே சம்பவம் உங்கள் வீட்டில் நடந்து இருந்தால் எப்படி கஷ்டமாக இருக்கும்.

ஹிஜாப் உள்ளே இருந்து பல பழகியவர்களுக்கு அது ஒரு பாதுகாப்பான உணவர்வை தரும் இதுவரை ஹிஜாப் அணிந்து வந்தவரை அதை அணிய கூடாது என்று சொன்னால் எவ்வளவு கஷ்டமா இருக்கும். நானே சில நேரங்களில் முகத்தை முடிக்கலாம் என்று நினைத்து இருக்கேன்.

இதுபோன்ற பாதுகாப்பற்ற உணர்வை முஸ்லிம் பெண்களுக்கு நேர்த்திருப்பது மிகவும் தவறான விஷயம் தயவு செய்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும் இந்தியாவின் பிரதமர் அவர்களுக்கும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு பெண்ணாக என்னுடைய முஸ்லிம் சகோதரிகளுக்கு நான் குரல் கொடுக்கிறேன் இனியும் இது தொடர்ந்தால் அத்தனை பேரும் ஹிஜாப் போட்டு வெளியில் வர வேண்டியிருக்கும் தயவு செய்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று உருக்கத்துடன் பேசியுள்ளார்.

Exit mobile version