Home CINEMA NEWS மகளின் திருமணத்தை ஆடம்பரம் இல்லாமல் முடித்த கருணாஸ் …!! வைரலாகும் புகைப்படம் ..!! 

மகளின் திருமணத்தை ஆடம்பரம் இல்லாமல் முடித்த கருணாஸ் …!! வைரலாகும் புகைப்படம் ..!! 

தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க நடிகர்களில் ஒருவர் கருணாஸ்.  ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நகைச்சுவை நாயனாக வலம் வந்தவர் நடிகர் கருணாஸ்.  அதனைத் தொடர்ந்து குணசித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார்.  ஓர் இரு படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் கருணாஸ்.  

இவரது மனைவி கிரேஸ் பல படங்களில் பின்னணி பாடகியாகவும் வலம் வந்துள்ளார் மற்றும் கிரேஸ் மற்றும் கருணாஸ் இணைந்து பல கானா பாடல்களையும் இசையமைத்துள்ளனர்.  மேலும் கருணாஸ்  அரசியல் கட்சி பிரமுகராகவும் உள்ளார் . இவ்வாறு கலைத்துறை மற்றும் அரசியலில் சிறப்பாக இருக்கும் கருணாஸிற்கு கென்  என்ற மகன் உள்ளார்.

 இவர் சமீபத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் நடித்திருப்பார்.  இந்தப் படத்தை தொடர்ந்து தற்பொழுது ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார்.   திரை உலகில் ஜொலித்து வரும் கருணாஸ் தனது மகள் டயானா மட்டும் திரையுலகிற்கு  அறிமுகம் படுத்தவில்லை. டயானா மருத்துவ படிப்பை முடித்துள்ளார். 

கருணாஸ் மக டயானாவிற்கு  திருமணம் நடைபெற்றுள்ளது. கருணாஸ் மகன் கென்   குடும்ப புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு “அக்கா மாமா” என பதிவிட்டுள்ளார்.  

தனது மகளின் திருமணத்தை சத்தமே இல்லாமல் முடித்து விட்டாரா கருணாஸ் என ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.  இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version