Home CINEMA NEWS அந்த மாதிரி நடிக்க நான் ரெடி…!! ஹாட் போஸில் அசத்தும் பிந்து மாதவி…!!

அந்த மாதிரி நடிக்க நான் ரெடி…!! ஹாட் போஸில் அசத்தும் பிந்து மாதவி…!!

நல்ல கலை அம்சம் உடைய நடிகையில் ஒருவர் நடிகை பிந்து மாதவி. இயக்குனர் பாலா, அமீர் போன்றோர் நன்கு நடிக்க தெரிந்த நடிகைகளே தேர்ந்தெடுப்பர் என பலர் கூறுவர். அப்படிப்பட்ட இயக்குனர்களின் முதல் விருப்பமாக உள்ளவர் நடிகை பிந்து மாதவி. இவர் தெலுங்கில் மிக பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர்.

2012ஆம் ஆண்டு கழுகு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்தில் இருந்து இவருக்கு அடுத்தடுத்து தமிழ் பட வாய்ப்புகள் வந்தன. தொடர்ந்து சிவகார்த்திகேயன், விமல் என பல முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்த பிந்து மாதவிக்கு இடையில் தமிழில் மார்க்கெட் இல்லாமல் போனது.

இதனால் பிக் பாஸ் சீசன் 1ல் இடையில் போட்டியாளராக பங்கு பெற்று இறுதி சுற்று வரை முன்னேறினார். பிக் பாஸ் இறுதி வரை சென்ற அவரால் டைட்டில் வின் பண்ண முடியவில்லை. அதேபோல் சினிமாவிலும் அவருக்கு அவர் எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன் பிறகு மீண்டும் முயற்சி செய்து கடந்த தெலுங்கு பிக் பாஸ் போட்டியில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது பிந்து மாதவிக்கு தமிழில் மூன்று படங்கள் கைவசம் உள்ளன. தெலுங்கிலும் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் பிந்து மாதவி அளித்த பேட்டியில் ஒன்றில் நீங்கள் நிர்வாணம் ஆக நடிப்பீர்களா என்று கேட்டனர். அதற்கு நிர்வாணமாக நடிப்பது ஒன்றும் தவறில்லை. கதைக்கு அப்படிப்பட்ட கேரக்டர் தேவைப்பட்டால் நடிக்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் சமீப காலமாக பிந்து மாதவி கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் நிர்வாணமாக நடிக்க நான் ரெடி என்று கூறியதில் எந்த தவறும் இல்லை என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Exit mobile version