Home CINEMA NEWS விஜயுடன் சேர்ந்து நடிப்பீர்களா பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு சூப்பர் பதில் அளித்த கமல்…!!! மலேசியாவில் பறந்த...

விஜயுடன் சேர்ந்து நடிப்பீர்களா பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு சூப்பர் பதில் அளித்த கமல்…!!! மலேசியாவில் பறந்த விசில் சத்தம்.

thalapthy vijay kamalhassan

உலகநாயகன் கமலஹாசன் தான் நடித்து வெளியாக இருக்கும் விக்ரம் படத்தை பிரமோஷன் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் பிக்பாஸ் நிகழ்ச்சி, சூப்பர் சிங்கர் என்று விஜய் டிவியின் வழியாக பிரமோஷன் செய்துவரும் கமலஹாசன் தற்போது தனது ரசிகர்களை சந்திப்பதற்காக மலேசியா சென்றுள்ளார்.

மலேசியாவில் தனது ரசிகர்களுடன் உரையாடிய கமலஹாசன் படத்தைப் பற்றியும் படத்திற்காக உழைத்ததை பற்றியும் கூறி வந்தார் அப்போது பத்திரிகையாளர்கள் கமலஹாசனிடம் தொடர்ந்து கேள்வி கேட்டு வந்தனர் அதற்கு பதில் அளித்து வந்த கமல்ஹாசனிடம் ஒரு பத்திரிகையாளர் நீங்கள் எப்போது தளபதியுடன் நடிக்க போறீங்க என்று கேட்டார் அதற்கு கமலஹாசன் தளபதி ஐயா கால்ஷீட் கிடைத்தவுடன் நான் நடிக்க தயார் என்று கூறியிருந்தார்.

அதனை தொடர்ந்து விஜய் படம் தயாரிக்கப்போறிங்களா என்று கேட்டதற்கு விஜய் படத்தை தயாரிப்பதற்கு தனது ராஜ்கமல் நிறுவனம் தயாராக உள்ளது என்று கூறினார். கமல் கூறிய இந்த பதிலுக்கு அங்கு இருந்த ரசிகர்கள் கரகோஷத்தை எழுப்பினர்.

விக்ரம் மூன்றாம் பாகத்தில் விஜய் நடிப்பாரா என்று கேட்டதற்கு ஏற்கனவே உங்களுக்கு தெரியும் அந்த படத்தில் வேறு ஒரு ஹீரோ நடிக்கிறார் என்று கூறினார் விக்ரம் மூன்றாம் பாகம் சூர்யா தான் நடிக்கிறார் என்பதை உறுதிப்படுத்தினார் கமல்.

Exit mobile version