Home NEWS விரைவில் இந்தியாவில் E -PASSPORT நடைமுறைக்கு வரும்…!!! E -PASSPORT இப்படி தான் இருக்கும்..!!! இந்திய...

விரைவில் இந்தியாவில் E -PASSPORT நடைமுறைக்கு வரும்…!!! E -PASSPORT இப்படி தான் இருக்கும்..!!! இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

epassport coming soon in india says by nirmala seetharaman

நிர்மலா சீதாராமன் இன்றைய பட்ஜெட்டில் பல தகவல்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் இந்தியாவில் E -PASSPORT அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறியுள்ளார்.

பாஸ்போர்ட்டில் CHIP பதியப்பட்டு எதிர்கால தொழில்நுட்பத்துடன் கூடிய பாஸ்போர்ட்கள் 2022ல் இருந்து 2023 இல் வெளியிடப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் இதனை தற்போது அறிவித்துள்ளார் இனி E -PASSPORT முதன்முதலில் 2019ல் அறிவிக்கப்பட்டது.

இந்தியர்களுக்கு E -பாஸ்போர்ட்கள் வழங்கும் பணி விரைவில் நடைபெறும் என்றும் விண்ணப்பிக்கும் முறை பாரம்பரிய பாஸ்போர்ட் களைப் போலவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதனைத் தொடர்ந்து பேசிய அவர் E -PASSPORTகளில் ஒரு உட்பொதிக்கப்பட்ட CHIP இருக்கும் அதில் பாஸ்போர்ட் இரண்டாவது பக்கத்தில் தெரியும் சுயசரிதை விவரங்கள் உட்பட அனைத்து தனிப்பட்ட தகவல்களும் இருக்கும்.

இ பாஸ்போர்ட்டில் டிஜிட்டல் கையொப்பம் இருக்கும் அது ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்துவமானது மற்றும் சான்றிதழ்களை பயன்படுத்தி எளிதாக சரி பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு E -PASSPORT அரசாங்கம் வழங்கியுள்ளது என்பதை தெரிவித்துக் கொண்ட அவர் நாட்டின் குடிமக்களுக்கு E -PASSPORT வழங்கப்படுவது இதுவே முதல்முறை. இந்தியாவில் முதல் பாஸ்போர்ட் 2008 ல் அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டேல் வழங்கப்பட்டது என்பதையும் குறிப்பிட்டு இருந்தார்.

விரைவில் இந்தியாவில் E -PASSPORT நடைமுறைக்கு வரும் என்று பட்ஜெட் 2022 தெரிவித்து உள்ளார்.

Exit mobile version