Home NEWS ஸ்டாலினை வாழ்த்திய எடப்பாடி பழனிச்சாமி..!!! ஸ்டாலினின் பதிலை பார்த்து ஆச்சர்யப்பட்ட தொண்டர்கள்.

ஸ்டாலினை வாழ்த்திய எடப்பாடி பழனிச்சாமி..!!! ஸ்டாலினின் பதிலை பார்த்து ஆச்சர்யப்பட்ட தொண்டர்கள்.

eps wishes to mk stalin

தமிழக சட்டசபை தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகி அமோக வெற்றியைப் பெற்றது திமுக. 151 இடங்களில் திமுக வெற்றி பெற்று பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியில் அமர்கிறது. அதிமுக 75 இடங்களில் வெற்றி பெற்றது.

தமிழகத்தில் திமுகவிற்கு மக்கள் கொடுத்துள்ள ஆதரவினைப் பார்த்து பிற கட்சிகள் வியந்து வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கும் இந்த நேரத்தில் அனைவரும் அவருக்கு ட்விட்டர் வழியாக தங்களது வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி, கேரள முதல்வர் பிரனாய் விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல தலைவர்கள் முக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். திமுகவை போட்டியாக கருதிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கூட நேற்று இரவே பெரு வெற்றி பெற்றுள்ள ஸ்டாலின் அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள் நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தில் முதல்வராக பொறுப்பு ஏற்றுஉள்ளீர்கள் சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள் என்று அவரது வாழ்த்தை தெரிவித்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திறம்பட அயராது உழைத்து வெற்றி அடைந்திருக்கும் என்னுடைய அன்பு நண்பர் மதிப்பிற்குரிய முக ஸ்டாலின் அவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடனும் இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தியடையும் வகையில் ஆட்சி செய்து தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்ற வேண்டும் என்று மனமார வாழ்த்தினார்.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மட்டும் வாழ்த்து கூறவில்லையே என்று மக்கள் அனைவரும் கூறி வந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழ்நாட்டில் முதலமைச்சராக பதவியேற்க உள்ள திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவரது வாழ்த்தினை தெரிவித்தார்.

அதற்கு ஸ்டாலின் அளித்த பதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வாழ்த்திற்கு பதில் அளித்த ஸ்டாலின் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் மிகச்சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் இணைந்ததே ஜனநாயகம் அத்தகைய ஜனநாயகம் காப்போம் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.

ஸ்டாலின் எடப்பாடி இருவருக்கும் போன 4 ஆண்டுகளாக கடுமையான வாக்குவாதம் நடந்து வந்தது. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஸ்டாலின் அளித்த பதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Exit mobile version