Home NEWS இனி சசிகலாவிடம் உரையாடினால் உடனே கட்சியிலிருந்து நீக்கம்..!!! 15 நிர்வாகிகள் அதிமுக கட்சியிலிருந்து திடீர் நீக்கம்...

இனி சசிகலாவிடம் உரையாடினால் உடனே கட்சியிலிருந்து நீக்கம்..!!! 15 நிர்வாகிகள் அதிமுக கட்சியிலிருந்து திடீர் நீக்கம் ஆக்சனில் இறங்கிய எடப்பாடி பழனிச்சாமி.

eps sasikala politics

சசிகலா தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே தனது தொண்டர்களை சந்தித்து பேச தொடங்கிவிட்டார். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீது அதிருப்தி அடைந்த சில தொண்டர்கள் மற்றும் கட்சி சார்ந்தவர்கள் சசிகலா அவர்களுக்கு கடிதம் மூலமாகவும் தொலைபேசி வாயிலாகவும் தொடர்புகொண்டு அம்மா நீங்கள் திரும்ப கட்சிக்கு வந்தால் மட்டுமே கட்சி நன்றாக இருக்கும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.

கட்சியின் தற்போதைய நிலையை பார்த்த சசிகலா அதிமுகவின் மூத்த தொண்டர்கள் அனைவரிடமும் நலம் விசாரித்து அரசியல் வருகை குறித்து பேசி வரும் ஆடியோ நாளுக்கு நாள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் எங்கள் கட்சியில் எந்த ஒரு விரிசலும் இல்லை சசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை என்று கூறி வந்தனர்.

குறிப்பாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அவர்கள் கருவாடு கூட மீன் ஆகலாம் ஆனால் சசிகலா அதிமுகவில் நுழைய முடியாது என்று உறுதியாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

Krishnagiri: Expelled AIADMK leader VK Sasikala pays tribute to former TN CM Jayaram Jayalalithaa on her return, after serving a jail term in a disproportionate assets case, in Krishnagiri district, Monday, Feb. 8, 2021. (PTI Photo)(PTI02_08_2021_000230B)

சசிகலா விரைவில் தொண்டர்களின் நலனுக்காகவும் மக்களுக்காகவும் அரசியலில் வருவேன் என்று பேசி வருகிறார் இந்நிலையில் சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்கள் மற்றும் இனி உரையாடுபவர்கள் உடனடியாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் கள்ளக்குறிச்சி ஆனந்தன் மற்றும் ஈரோடு விகே சின்னசாமி உள்ளிட்ட 15 நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து திடீரென்று நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த அதிரடி முடிவு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version