Home NEWS வெண்மைப் புரட்சியின் தந்தை என போற்றப்படும் டாக்டர் வர்கீஸ் குரியன் உருவப்படம் பொறித்த ஆவின் பால்...

வெண்மைப் புரட்சியின் தந்தை என போற்றப்படும் டாக்டர் வர்கீஸ் குரியன் உருவப்படம் பொறித்த ஆவின் பால் பாக்கெட்டுகளில் அச்சிட்டு வெளியீடு…!!!

Dr. Varghese Kurien

வெண்மைப் புரட்சியின் தந்தை டாக்டர் வர்கீஸ் குரியன் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆவின் பால் பாக்கெட்டுகளில் அவரது உருவப்படம் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதற்காக முதல்வர் முக ஸ்டாலின் அமைச்சர் ஆகியோருக்கு பொதுமக்கள் பால் முகவர்கள் விற்பனையாளர்கள் வரவேற்று பாராட்டு தெரிவித்தனர். கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ்.

இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுகிறார். விற்பனை கூட்டமைப்பின் தலைவராக வர்கீஸ் இருந்துள்ளார். முதலில் கைரா மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை மேம்படுத்திய அவர் கூட்டுறவு அமைப்பு மூலம் அமுல் என்ற வணிகப் பெயருடன் பால் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

அமுல் மாதிரி திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தி கூட்டுறவு பால் உற்பத்தி திட்டத்தை மாபெரும் தேசிய திட்டமாகவும் வெற்றிபெற வைத்தார். மேலும் கூட்டுறவு பால் பண்ணை மேம்பாட்டுத் திட்டத்தை நவீனப்படுத்த உதவிய வர்கீஸ் இந்தியாவின் வெண்மை புரட்சியை வழிநடத்தினார். இதன் மூலம் உலகிலேயே கூடுதலாக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியாவை முன்னேற்றினால் 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி தனது 90 ஆவது வயதில் வரைந்தவர் பத்ம விருதுகள் உட்பட பல்வேறு உயரிய விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

இந்நிலையில் வெண்மைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் வர்கீஸ் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் நேற்று விற்பனை செய்யப்பட்ட 27 லட்சம் ஆவின் பால் பாக்கெட்டுகளில் அவரது உருவப்படத்தை அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் நாசர் மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மற்றும் பால் முகவர்கள் விற்பனையாளர்கள் வரவேற்று பாராட்டு தெரிவித்தனர்.

Exit mobile version