Home NEWS தெருத்தெருவாக டீ விற்ற இளம்பெண்..!! சுயதொழில் செய்ய இலவசமாக தள்ளுவண்டி வழங்கிய எம்எல்ஏ..!!

தெருத்தெருவாக டீ விற்ற இளம்பெண்..!! சுயதொழில் செய்ய இலவசமாக தள்ளுவண்டி வழங்கிய எம்எல்ஏ..!!

தமிழகத்தில் கொரானா காரணமாக பல மாவட்டங்களில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. சென்னையை அடுத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டமாக கருதப்படுவது மதுரை மாவட்டம். இந்த மாவட்டத்தில் வேலைவாய்ப்பு இழந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் திண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையை சேர்ந்த இந்திராநகர் கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் உமா சல்பா. இவருக்கு வயது 26. தனது குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளதால் சுற்றியுள்ள பகுதிகளான தமுக்கம், கோரிப்பாளையம், அண்ணா பஸ் ஸ்டாண்ட், கலெக்டர் அலுவலகம் போன்ற பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் சென்று டீ விற்று வந்துள்ளார்.

கொரானாவிற்கு முன்பு இவர் வீட்டு வேலை பார்த்து வந்தார். கொரானா பரவிவரும் பயத்தால் இவரை
யாரும் வீட்டு வேலைக்கு அழைக்காததால் மறைந்த தன் அப்பாவின் வேலை ஆன டீ வியாபாரத்தை கையிலெடுத்து தெருத்தெருவாக போய் விற்று வந்துள்ளார்.

இது குறித்து பிரபல நாளிதழ் ஒன்று இவரை பேட்டி அளித்த பொழுது அரசாங்கமா பார்த்து எனக்கு ஒரு சின்ன பெட்டிக்கடை மட்டும் வெச்சு கொடுத்தா நான் நிம்மதியாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.

இதனை பார்த்த திருப்பரங்குன்றம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பா. சரவணன் எம்எல்ஏ, உமா சல்பாவை நேரில் சந்தித்து அவரது விருப்பப்படி தள்ளுவண்டி ஒன்றை இலவசமாக வழங்கி உள்ளார். மேலும் விரும்பினால் தனது மருத்துவமனையிலேயே அவருக்கு வேலை வழங்கவும் தயார் என்றும் உறுதி அளித்துள்ளார். இவரது இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Exit mobile version