Home MOVIE REVIEW ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்.

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்.

jagame thandiram movie review

ஜகமே தந்திரம் தனுஷின் தொடர் வெற்றிகளுக்கு பிறகு அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட படம். பீட்சா, ஜிகர்தண்டா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த படத்திற்கு அதிக அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. அதுமட்டுமல்லாமல் இது அவரது கனவு படம் என்று கூறியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ். படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்.

ஜகமே தந்திரம் வழக்கம் போல இரு தரப்புக்கு டான்களுக்கு இடையே நடக்கும் மோதல் கதை தான். அந்த கதையில் ஒரு பிளாஷ்பேக் வேண்டும் என்பதற்காக இலங்கை அகதிகள் விஷயத்தை கூறி இருக்கிறார்கள். ஃப்ளாஷ்பேக் கண்கலங்க வைத்தாலும் டீட்டைலிங் இல்லாதது போல் இருந்தது.

சுருளி என்ற கதாபாத்திரத்தில் மதுரை டானாக நடித்திருக்கிறார் தனுஷ். தனுஷ் எவ்வளவு பெரிய நடிகர் என்பதை அவருடைய முந்தைய படங்கள் நிரூபித்து விட்டது எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு கச்சிதமாக தன்னை மாற்றி கொள்கிறார். இந்தப்படத்திலும் சுருளி கதாபாத்திரத்தில் தன்னை எந்த அளவிற்கு பங்களிக்க முடியுமோ அந்தளவிற்கு பங்களித்திருக்கிறார்.

ஒரு மனிதன் எங்கு பிறக்கிறான் என்பது அவனுடைய பூர்விகம் இல்லை எங்கு வாழ்கிறானோ அதுதான் அவருடைய பூர்விகம் என்று அவர் பேசும் வசனங்கள் நச். குறிப்பாக ரக்கிட ரக்கிட பாடலுக்கு அவர் போட்ட ஆட்டம் செம.

ஹீரோயின் ஐஸ்வர்யா லட்சுமி இலங்கை அகதி பெண்ணாக நடித்து அசத்தியுள்ளார். பிளாஷ்பேக் காட்சியில் இவருக்கு நடிக்க நல்ல வாய்ப்பு.

மதுரையிலிருந்து லண்டனில் தாதாவாகவும் தனுஷ் எப்படி அகதிகளை மீட்கிறார் என்பதுதான் கதை. கார்த்திக் சுப்புராஜ் வித்தியாசமான கதைக்களத்தில் கதையை நகர்த்தும் ஒரு இயக்குனர் ஆனால் அவர் இயக்கிய கடைசி சில படங்களில் அவருடைய கதை அழுத்தம் இல்லாமல் இருப்பது பெரிய மைனஸ். ஜிகிர்தண்டா, pizza போன்ற படங்களில் இருக்கும் கதை அழுத்தம் தற்போது வெளியாகும் அவருடைய படத்தில் இல்லை என்பதே உண்மை.

இந்தப் படம் கொஞ்சம் நல்லா இருக்கு நிறைய நல்லாவே இல்லை என்று தான் சொல்ல முடிகிறது. ஜகமே தந்திரம் படத்தை அவருடைய கனவு படம் என்று கூறியிருந்த கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தின் கதையை கொஞ்சம் அழுத்தமாக பதிவு செய்து இருக்கலாமே என்று தோன்றுகிறது. அதுமட்டுமல்லாமல் வித்தியாசமான கேங்ஸ்டர் படம் ஆக இருக்கும் என்று நம்பி பார்த்த அனைவருக்கும் இந்தப் படம் பெரிய ஏமாற்றம்.

சந்தோஷ் நாராயணன், படத்தில் பெரிய ஆறுதல் இவருடைய பின்னணி இசை மிரட்டுகிறது. அதுபோல ரக்கிட ரக்கிட பாடல் இறங்கி அடித்திருக்கிறார் மனிதர். சென்டிமென்ட் காட்சிகளிலும் கேங்ஸ்டர் மோதும் காட்சிகளிலும் அதற்கேற்ப பின்னணி இசை கொடுத்து கவனிக்க வைக்கிறார்.

ஒளிப்பதிவு ஷிரேயாஸ் கிருஷ்ணா இலங்கை அகதிகள் பற்றி வரும் பிளாஷ் பேக் காட்சிகள் எடுத்த விதம் அருமை, அதுபோல மதுரை சம்பந்தப்பட்ட ஆரம்ப காட்சியிலும் நன்றாக எடுத்துள்ளார். தரமான ஒளிப்பதிவு.

மொத்தத்தில் ஜகமே தந்திரம் சோழ தேசத்தில் இருந்து வந்த லண்டன் தாதா சம்பவங்கள் செய்திருந்தாலும் தரமான சம்பவங்களை செய்யவில்லை என்பதே உண்மை.

ரேட்டிங்: 2 .5 / 5

Exit mobile version