Home NEWS ரோந்து பணிக்கு செல்வோர் கைத்துப்பாக்கி எடுத்து செல்ல அனுமதி வழங்கிய டிஜிபி சைலேந்திர பாபு…!!! எஸ்.ஐ...

ரோந்து பணிக்கு செல்வோர் கைத்துப்பாக்கி எடுத்து செல்ல அனுமதி வழங்கிய டிஜிபி சைலேந்திர பாபு…!!! எஸ்.ஐ பூமிநாதன் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி.

sylendra babu

நவல்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பூமிநாதன் சனிக்கிழமை அன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஆடு திருடர்கள் விரட்டி சென்று பிடித்த நிலையில் அவர்களால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை 5 தனிப்படை காவலர் அமைக்கப்பட்ட 24 மணி நேரத்திலேயே 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

டிஜிபி சைலேந்திரபாபு இன்று உயிரிழந்த உதவி ஆய்வாளர் பூமிநாதன் இல்லத்திற்கு சென்று உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். அதோடு குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழக காவல்துறை அதிகாரிகளில் சிறந்த காவல்துறை அதிகாரியாக பணியாற்றியிருக்கிறார்.

மேலும் பூமிநாதன் வீரத்தோடு விவேகத்தோடு பணியாற்றியுள்ளார். அதைத்தொடர்ந்து சாதாரண ஆடு திருட்டு தானே என்று விட்டு விடாமல் முறைப்படி விசாரணை மேற்கொண்டுள்ளார். அதோடு மூன்று பேரை 15 கிலோமீட்டர் துரத்தி சென்று பிடித்து உள்ளார் ஆடு திருடர்கள் வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சிறுவர்களுடைய பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு 23 நிமிடங்கள் அறிவுரை கூறியுள்ளார்.

மேலும் சட்ட விதிகளின்படி முறையாக கடைப்பிடித்து உள்ளார். திடீரென அந்த சிறுவர்கள் இப்படி ஒரு தாக்குதலை நடத்துவார்கள் என எதிர்பார்க்கவில்லை. அவருடைய வீர மரணம் தமிழக காவல்துறை வீரமிக்க விவேகமிக்க காவல்துறை என்பதை எடுத்துக்காட்டுகிறது. மேலும் தமிழக முதல்வர் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாகவும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாகவும் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலினுக்கு காவல்துறை சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்தார்.

இதுபோன்ற தாக்குதல்களை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் முக்கியம். இறந்த பூமிநாதன் கடமை தவறாமல் நடந்து அதோடு உயிர்த் தியாகம் செய்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடுவோர் கைத்துப்பாக்கி 6 தோட்டாக்கள் எடுத்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற சூழ்நிலையில் உயிரை காப்பாற்றிக்கொள்ள துப்பாக்கியை பயன்படுத்த தயக்கம் காட்டக்கூடாது என்றும் தெரிவித்துள்ளோம் என டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

Exit mobile version