Home NEWS நவம்பர் டிசம்பர் மாதத்தில் குழந்தைகளைத் தாக்கும் கொரோனா மூன்றாவது அலை நிபுணர்கள் எச்சரிக்கை..!!! இரண்டாம்...

நவம்பர் டிசம்பர் மாதத்தில் குழந்தைகளைத் தாக்கும் கொரோனா மூன்றாவது அலை நிபுணர்கள் எச்சரிக்கை..!!! இரண்டாம் அலையே முடியல அதுக்குலையா.

corona third wave

கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்திய நோய்தொற்று. இன்று பலர் தனது குடும்பத்திற்கு நெருக்கமானவர்களையும் குடும்பத்தில் உள்ளவர்களையும் இழந்து தவிக்கின்றனர். சிறுவயதிலேயே தனது தந்தைக்கு கொல்லி வைக்கும் குழந்தை போன்ற வீடியோக்களை பார்க்கும் பொழுது நெஞ்சை உருக்கியது. கொரோனாவின் கோரத் தாக்குதலால் பலர் இன்று தனது சொந்தங்களை இழந்து தவிக்கின்றனர்.

இந்தியாவில் ஒரு பக்கம் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தது வரும் இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று இன்று தெரிவித்திருந்தார். இந்தக் கடினமான நேரத்தில் ஆறுதலாக இருந்தது முதலமைச்சரின் இந்த அதிரடி உத்தரவு.

தற்பொழுது கொரோனாவின் இரண்டாம் அலையே பயங்கர தீவிரமாக இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆம்புலன்ஸ் சத்தங்களும் மரணச் செய்திகளை நாம் அடிக்கடி கேட்டு வருகிறோம். பிரபலங்கள் முதல் சராசரி மக்கள் வரை தொடர்ந்து நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையில் நாம் போராடிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் மூன்றாவது அலை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பரவ வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். கொரோனாவின் மூன்றாவது அலை குறிப்பாக குழந்தைகளை அதிக அளவு தாக்க வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரித்துள்ளனர்.

இரண்டாம் அலையில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை உயிரை காவு வாங்கிக் கொண்டிருக்கும் இந்தக் கொடிய நோய் மூன்றாவது அலையில் அதிகம் குழந்தைகளை தாக்கும் என்று கூறியிருக்கிறார்கள் நிபுணர்கள்.

கொரோனா மூன்றாவது அலை குறிப்பாக குளிர் காலத்தில் அதாவது நவம்பர் மாதம் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் தான் பரவும் என்று கணித்துள்ளார்கள். இதுகுறித்து அரசின் கணித முறையில் தொற்றுநோய் கணிக்கும் நிபுணரான வித்யாசாகர் அவர்கள் கூறுகையில் தற்போது டிசம்பர் மாதம் வரை நமக்கு நேரம் இருக்கிறது அதற்குள் தடுப்பூசி போடுவதன் மூலம் மூன்றாவது அலையின் பாதிப்பை குறைக்கலாம்.

குழந்தைகளை பொறுத்தவரை ஏற்கனவே அதிக நோய் எதிர்ப்பு இருக்கும் என்பதனால் கொரோனா பாதிப்பால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது என்று கூறியுள்ளார்.

கொரோனாவின் மூன்றாவது அலையில் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நம் நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Exit mobile version