Home NEWS காமெடி நடிகர் மயில்சாமி ஒன்றிய அரசை கண்டித்து செய்த செயலால் பரபரப்பு..!!! அப்படி என்ன செய்துள்ளார்...

காமெடி நடிகர் மயில்சாமி ஒன்றிய அரசை கண்டித்து செய்த செயலால் பரபரப்பு..!!! அப்படி என்ன செய்துள்ளார் தெரியுமா.

Mayilsamy

ஒன்றிய அரசைக் கண்டிக்கும் விதமாக மணமக்களுக்கு பெட்ரோல் பரிசாக வழங்கியுள்ளார் நடிகர் மயில்சாமி. தமிழில் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருபவர் மயில்சாமி. கடந்த சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு மயில்சாமி தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் தனது உறவினர் ஒருவரது வீட்டு திருமணத்திற்கு அவர் சென்று இருந்தார். அப்போது இரண்டு கேன்களில் பெட்ரோலை நிரப்பி அதை மணமக்களுக்கு பரிசாக வழங்கினார். இதுபற்றி கூறும்போது திமுக ஆட்சியில் பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

இதை வரவேற்கிறேன். அதேசமயம் ஒன்றிய அரசு தொடர்ந்து இது பற்றி கவலை இல்லாமல் பெட்ரோல் விலையை உயர்த்தி வருகிறது. மக்கள் விரோத போக்கை கையாளுகிறது. அதை கண்டிக்கும் விதமாக மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசளித்தேன் என்றார்.

Exit mobile version