Home NEWS பொது மக்களுக்கு இலவச Wifi வசதி ஏற்படுத்திய சென்னை மாநகராட்சி…!!! கொண்டாட்டத்தில் மக்கள்.

பொது மக்களுக்கு இலவச Wifi வசதி ஏற்படுத்திய சென்னை மாநகராட்சி…!!! கொண்டாட்டத்தில் மக்கள்.

corporation

சென்னை மாநகராட்சியின் சார்பில் நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள பகுதிகளில் 30 நிமிடங்களுக்கு வைஃபை தொடர்பை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பல்வேறு விதமான திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாநகரின் முக்கிய இடங்களை கண்காணித்தல் பேரிடர் மேலாண்மை குறித்து தகவல் கருவிகள் மூலம் அறிதல் திட்டக்கழிவு அகற்றும் பணிகளை கண்காணிக்க கேமரா நிறுவுதல் மற்றும் அது சார்ந்த தகவல்கள் பெறப்பட்டு அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தல் போன்ற பல்வேறு பணிகள் இணையவழி சாதனங்களில் மூலம் ரிப்பன் கட்டிடத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணிக்கப்படுகின்றன.

இத்திட்டத்தில் சிறப்பு அம்சமாக சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் 49 ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் கம்பங்களில் உள்ள wi-fi தொடர்பை பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் கைபேசி எண்ணை பதிவு செய்து ஓடிபி மூலம் இச்சேவையை பெற்றுக்கள்ளலாம்.

மேலும் பொதுமக்கள் இலவச வைஃபை இணைப்பு அமைக்கப்பட்டுள்ள 49 சுமார் கம்பங்கள் உள்ள இடங்களை சென்னை மாநகராட்சியின்  https://chennaicorporation.gov.in/gcc/images/WiFiSmartPol.pdfஇணையதள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Exit mobile version