Home NEWS “முதல்வரின் முகவரி” என புதிய துறையை அதிரடியாக தொடங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…!!! மக்கள் இனிமேல் மனு...

“முதல்வரின் முகவரி” என புதிய துறையை அதிரடியாக தொடங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…!!! மக்கள் இனிமேல் மனு கொடுக்க அலைய வேண்டியது இல்லை.

mk stalin

முதல்வர் தனிப்பிரிவு உங்கள் தொகுதியில் முதலமைச்சர் உள்ளிட்ட மூன்று துறைகளை ஒருங்கிணைத்து “முதல்வரின் முகவரி” என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. இனிமேல் பொதுமக்கள் தங்கள் புகார் குறைகள் மனுக்களை இத்துறை கையாளும் இத்துறையில் சிறப்பு அலுவலராக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையில் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை முதலமைச்சரின் தனிப்பிரிவு முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பில் ஒரு முதன்மை பொது குறைதீர்ப்பு அலுவலர் பதவி முதல்வரின் முகவரி துறை சிறப்பு அலுவலர் உதவியுடன் இணைக்கப்படுகிறது மற்றும் ஆறு பொதுக்குறை தீர்வு மேற்பார்வை அலுவலர்கள் இனி முதல்வரின் முகவரி துறை சிறப்பு அலுவலரின் கட்டுப்பாட்டில் செயல்படுவார்கள்.

தீர்வு மேற்பார்வை அலுவலர்களுக்கு தேவைப்படும் அனைத்து கட்டமைப்பு வசதிகள் தளவாடங்கள் மற்றும் பிற வசதிகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் தொடர்ந்து வழங்கப்படும். தலைமை செயலகத்தில் முதல்வரின் முகவரி துறைக்கு தேவைப்படும் அனைத்து உதவிகள் வழங்கும் ஒருங்கிணைப்பு துறை பொது நிர்வாகம் 4 துறை செயல்படும் துறையில் மனுக்களுக்கு தீர்வு காண IIPGCMS helpline மாநிலம் முழுவதும் ஒற்றை இணையதள முகப்பு பயன்படுத்தப்படும்.

இது முதல்வரின் முகவரி துறை கட்டுப்பாட்டில் இருக்கும் IIPGCMS helpline தகவல் அழைப்பு மையம் 1100 என்ற தொலைபேசி எண் மக்கள் தொடர்பாக விசாரிப்பதாக தகவல் பெறுவதற்காகவும் மனுக்களை பதிவு செய்வதற்காகவும் மற்றும் இதர பணிகளுக்காகவும் இனி முதல்வரின் முகவரி துறையின் கீழ் இயங்கும் இந்த இணையத்தளம் தொடர்பான அன்றாட செயல்பாடுகள் குறித்து முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலர் பொதுத்துறை செயலாளர்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்வார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையில் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் முதல்வரின் முகவரி துறையில் சிறப்பு அலுவலராக நியமிக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

Exit mobile version