Home NEWS ஜெ.ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை செல்லாது…!!! வாரிசுதாரர்களுக்கே சொந்தம்… 3 வாரங்களில் ஒப்படைக்க அதிரடி உத்தரவிட்டது...

ஜெ.ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை செல்லாது…!!! வாரிசுதாரர்களுக்கே சொந்தம்… 3 வாரங்களில் ஒப்படைக்க அதிரடி உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

Jayalalitha

சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் சொந்த வீடு உள்ளது. போயஸ் கர்டனில் உள்ள இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு அதிமுக அரசு முயற்சி மேற்கொண்டது. மேலும் ஜெயலலிதாவின் வேதா இல்லத்திலுள்ள அனைத்து பொருட்களையும் கணக்கிடும் பணிகள் நடந்தன.

இதைத்தொடர்ந்து அதிமுக ஆட்சியில் வேதா இல்லத்தில் உள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடைமை ஆக்கியது. மேலும் தமிழ்நாடு அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகளான தீபா மற்றும் தீபக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் இருவரும் வேதா இல்லத்தில் அரசு சார்பில் இழப்பீடு தொகையாக ரூபாய் 67 கோடியே 90 லட்சம் ரூபாயை நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர்.

பல நாட்களாக இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில் ஜெயலலிதா வசித்து வந்த வேதா எல்லாம் தனிநபர் சொத்தாக இருப்பதால் அரசு இதில் அரசு தலையிட முடியாது. அதோடு கையகப்படுத்துவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும் இந்த வழக்கில் அரசு தரப்பு மற்றும் மனுதாரர் வாதங்களை பதிவு செய்த நீதிபதி சேஷசாயி இந்த வழக்கு குறித்து தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தார். இந்நிலையில் இன்று “வேதா இல்லத்தை அரசுடமையாக்க அரசின் உத்தரவு செல்லாது” என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஜெயலலிதாவின் வேதா இல்லம் 3 வாரங்களுக்குள் அவர்களின் வாரிசாக அறிவிக்கப்பட்ட தீபா தீபக் இடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version