Home CINEMA NEWS பிக்பாஸ் பிரபலம் ஆரவ் தந்தையானார்..!!! குழந்தை பிறந்த சந்தோஷத்தில் ஆரவ் மற்றும் குடும்பத்தினர்.

பிக்பாஸ் பிரபலம் ஆரவ் தந்தையானார்..!!! குழந்தை பிறந்த சந்தோஷத்தில் ஆரவ் மற்றும் குடும்பத்தினர்.

aarav blessed with baby boy

ஆரவ் நாகர்கோவிலில் பிறந்தவர். ஓ காதல் கண்மணி என்ற மணிரத்தினத்தின் இயக்கத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதனைத்தொடர்ந்து சைத்தான் என்ற விஜய் ஆண்டனி அவர்களின் படத்தில் நடித்திருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆரவ் மக்களிடம் பெரிய பிரபலத்தை அடைந்தார். ஆரவ் ஓவியாவும் பிக்பாஸ் வீட்டில் காதலித்து வருகிறார்கள் என்ற செய்திகளெல்லாம் வெளியே வந்தது.

பிக்பாஸ் விட்டு வெளியே வந்ததும் மார்க்கெட் ராஜா என்ற படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தை இயக்கியவர் தல அஜித்தின் அட்டகாசம் படத்தை இயக்கிய சரண் அவர்கள் இயக்கி இருந்தார்.

ஆரவ் ஓவியா ஒன்றாக வெளிநாடுகள் சுற்றிவந்தனர். அதன் பின் என்ன காரணமோ ஆரவ் பற்றி ஓவியா பேசவில்லை.

ஆரவ் அதன் பின் நடிகை ராஹி என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் செப்டம்பர் 6ம் தேதி திருமணம் செய்து கொண்டார்

ஓவியா பற்றி ஆரவ் வாய் திறக்கவில்லை. இன்ஸ்டாகிராமில் லைவ் வந்த ஓவியாவிடம் ஆரவ்வின் திருமணத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று ரசிகர் ஒருவர் கேள்வி கேட்க அதற்கு பதிலளித்த ஓவியா, ஆரவ்வின் திருமணத்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்போது நான் கேரளாவில் இருந்ததால் தான், திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. எங்கள் இருவருக்குள் என்ன இருந்ததோ அது முடிந்துவிட்டது. இப்போது அவருக்கென ஒரு அழகான வாழ்க்கை அமைந்திருக்கிறது என்று மழுப்பினர் ஓவியா.

ஆரவ் நண்பர்கள் மட்டும் திருமண விழாவில் கலந்து கொண்டனர் திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் தற்பொழுது ஆரவ் ராஹி தம்பதியினருக்கு ஆண் குழந்தை இன்று பிறந்து உள்ளது. இந்த மகிழ்ச்சி செய்தியை அறிந்த திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Exit mobile version