Home CINEMA NEWS இரவின் நிழல் படத்தை தவறாக விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன்…!!! ஆதாரத்துடன் கிழித்து தொங்கவிட்ட...

இரவின் நிழல் படத்தை தவறாக விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன்…!!! ஆதாரத்துடன் கிழித்து தொங்கவிட்ட பார்த்திபன்..!!!

iravin nizhal review by blue sattai maran

பார்த்திபனின் இரவின் நிழல் இந்தப் திரைப்படம் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. வித்தியாசமான திரைப்படங்களை மக்கள் விரும்ப ஆரம்பிக்கிறார்கள் என்பதற்கு இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகளை சான்று.

பார்த்திபன் வித்தியாசமான படங்களில் நடித்து ரசிகர்களின் பார்வையை தன் மீது திருப்புகிறார் புதிய பாதை என்ற படத்தை இயக்கி பெரிய வெற்றியை கண்ட பார்த்திபன் அதனை தொடர்ந்து வித்தியாசமான படங்களை இயக்கி வந்தார். இவன், குடைக்குள் மழை, பச்சைகுதிரை வித்தியாசமான படங்களை எடுத்த பார்த்திபன் கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தை எடுத்தார்.

அதனை தொடர்ந்து கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தை எடுத்திருந்தார். சமீபத்தில் அவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படம் நேஷனல் அவார்டை பெற்றது. தற்பொழுது இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்து ரிலீஸ் செய்துள்ளார் இந்த திரைப்படத்திற்கு ஏஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்திருந்தார்.

உலகிலேயே முதல் NON LINEAR SINGLE SHOT திரைப்படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றது. பார்த்திபனின் இரவின் நிழல் படத்தை பார்த்த ரஜினிகாந்த் கமலஹாசன் புகழ்ந்து தள்ளி உள்ளனர். வித்தியாசமான சினிமாவை ரசிகர்களுக்கு விருந்தாக கொடுத்ததற்கு பார்த்திபனை பல தரப்பிலிருந்து பாராட்டி வந்தனர். விமர்சனங்கள் அனைத்தும் பாசிட்டிவாக வர ப்ளூ சட்டை மாறன் அவர்கள் இரவின் நிழல் படத்தை விமர்சனம் செய்தார் அதில் இரவின் நிழல் படத்தின் மேக்கிங் வீடியோ பார்க்கையில் பார்த்திபனின் உழைப்பு மற்றும் கண்முன் நிற்கிறது ஆனால் படத்தின் இரண்டாம் பாதியை பார்க்கையில் என்ன சொல்ல வாரார் கதை என்ன என்பது சரியாக புரியவில்லை. பார்த்திபன் அவர்கள் வித்யாசமான படத்தை இயக்குகிறேன் என்று இதுபோன்ற முயற்சி எடுப்பதற்கு நல்ல கதையுள்ள படங்களை எடுக்கலாம் என எல்லாம் கூறியிருந்தார். அது போல இது world first non linear shot movie என்று விளம்பரம் செய்கிறார்கள் ஆனால் அதற்கு முன்பே நிறைய படங்கள் வந்துவிட்டது என்று கூறி சில படங்களை குறிப்பிட்டு இருந்தார் ப்ளூ சட்டை மாறன்.

BLUESATTAI IRAVIN NIZHAL MOVIE REVIEW

Video Credits: Tamil Talkies Maran

ப்ளூ சட்டைக்கு பதிலடி கொடுத்த பார்த்திபன் கூறியது விமர்சனங்கள் யாவும் விமோசனங்கள் என நான் நன்றியுடன் நெகிழ, சனங்களோ உலக level-ல் ஒன்றென உருக, நண்பர் blue sattai மாறன் அவர்களின் மாறுபட்ட விமர்சனத்தையும் பார்த்து விட்டு படம் பார்க்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். அதுசரி! எதுசரி என விளங்க!

More over..

Google-ல் அவர் சொல்லும் படம் ‘non-linear’என்ற வரிசையில் இல்லை.இன்றும். அவர் அளவுக்கு நான் அறிவுஜீவி இல்லை ! Film critic Mr saibal Chatterji உள்ளிட்ட பலரிடம் படம் காட்டி உறுதி செய்துக் கொண்டேன். குறைந்த பட்சம் ஒரு வருடமாக இப்படத்தை ‘the world’s first non-linear shot movie’ என விளம்பர படுத்தி வரும் என்னிடம் அவரே இப்படி ஒரு படம் இருப்பதாக சொல்லியிருக்கலாம். 15 தினங்களுக்கு முன் நானே அவரை தொலைப்பேசியில் ஸ்பெஷல் show பார்க்க அழைத்தேன்.அப்போதாவது என்னிடம் இதை சொல்லி என்னைத்
திருத்தி, மக்களை நான் ஏமாற்றுவதைத் தடுத்து ஆபத்பாந்தவனாகி இருக்கலாம். அவர் படம் (அழைத்தும் நான்) போகவில்லை என்பதென் வருத்தமே! விமர்சகர் என்பதை மீறி இயக்குனர் என்பதால் அவர் மீது இன்றும் மரியாதயே! என்று பார்த்திபன் கூறி உள்ளார்.

இதையும் படிங்க : மாடர்ன் உடையில் கொக்கி போட்டு இழுக்கும் கீர்த்தி சுரேஷ்..!!! மாஸ்டர் பிளான் என்ன தெரியுமா..!!!
இதையும் படிங்க : இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாணமாக நடித்ததற்கு என்னை பாராட்டினார்கள் VJ சித்ராவின் நெருங்கிய தோழி ரேகா நாயர் பேட்டி…!!!
Exit mobile version