Home NEWS கோயிலை திறக்காமல் மதுக்கடைகளை திறக்கிறார்கள் – எச் ராஜா ஆவேசம்.

கோயிலை திறக்காமல் மதுக்கடைகளை திறக்கிறார்கள் – எச் ராஜா ஆவேசம்.

H Raja Against TASMAC

எச் ராஜா அவர்கள் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக சார்பாக காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டார். காரைக்குடி தொகுதியில் 54365 வாக்குகளைப்பெற்று தோல்வி அடைந்தார். காரைக்குடி தொகுதியில் இந்தியன் நேஷனல் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார்.

ஹெச் ராஜா பாஜக கட்சியின் மீது தீராத அன்பு கொண்டவர் எப்போதும் பாஜகவை விட்டுக்கொடுக்காமல் பேசிவரும் எச் ராஜா தனது கருத்துக்களை டுவிட்டர் மூலமாக முதலில் தெரிவிப்பார் தெரிவித்தவுடன் அந்தக் கருத்து சர்ச்சைக்குரியதாக மாறி அனைவரும் கண்டனம் தெரிவித்த பின் நான் அந்த ட்வீட்டை போடவில்லை என்னுடைய அட்மின் போட்டு விட்டார் என்று கூறி எஸ்கேப் ஆவார்.

அதுபோல சமீபத்தில் சிவகார்த்திகேயனின் அப்பா கொல்லப்பட்டார் என்று வேறு யாரோ ஒருவரை சிவகார்த்திகேயனின் தந்தை என்று நினைத்துக் கொண்டு பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதற்கு நக்கீரன் கோபால் அவர்கள் ஏதாவது பேசவேண்டும் என்பதற்காக பேசக்கூடாது சிவகார்த்திகேயன் தந்தை எச் ராஜா கூறியவர் இல்லை என்று தெளிவு படுத்தினார்.

எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் பாஜக சார்பாக முதலில் குரல் கொடுக்க ரெடியாக இருப்பது எச் ராஜா அவர்கள் தான். தற்பொழுது மதுக்கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி பாஜகவினர்கள் ஒன்று கூடி அந்த அந்த பகுதியில் போராட்டம் நடத்தி உள்ளனர்.

போராட்டத்தில் கோவில்கள் இல்லை மதுக்கடை எதற்கு? தமிழக அரசே தமிழக அரசே மதுக்கடைகளை திறக்காதே தமிழக அரசே தமிழக அரசே ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே என்று கோஷத்தையும் எழுப்பியுள்ளார் எச் ராஜா.

அதன்பின் தொற்று அதிகமாக இருக்கும்போது டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்ட தமிழக அரசை கண்டித்தும் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி பாஜக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மண்டல் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

எச் ராஜாவிற்கு ஆதரவாக பாஜகவினர் சிலர் கருத்துக்களை தெரிவித்து வந்தாலும் இதனை பார்த்த நெட்டிசன்கள் சிலர் சரி விடு தல ஒரு கட்டிங் போட்டா சரி ஆகிடும் என்று கிண்டல் செய்தும் வருகின்றனர்.

Exit mobile version