Home CINEMA NEWS வாய்ப்பிற்காக காத்திருக்கும் பிக்பாஸ் மணிகண்டன்…!! வாங்கிய சம்பளம் மட்டும் இத்தனை லட்சமாம்..!!

வாய்ப்பிற்காக காத்திருக்கும் பிக்பாஸ் மணிகண்டன்…!! வாங்கிய சம்பளம் மட்டும் இத்தனை லட்சமாம்..!!

aishwarya rajesh brother manikandan salary

பிக்பாஸ் சீசன் 6 தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் புத்தாண்டிற்காக எலிமினேஷன் இருக்காது என்று நினைத்தால், வழக்கம் போல் இந்தவாரமும் எலிமினேஷன் நடந்தது. இந்த வாரம் பிக் பாஸை விட்டு மணிகண்டன் வெளியேறினார்.

சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்துள்ள மணிகண்டன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன் அண்ணன் ஆவார். அவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.

சினிமாவில் எப்படியாவது கால் தடம் பதிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக வந்த மணிகண்டன், இந்த சீசனில் கலந்து கொண்டதில் இருந்தே சுமாரான போட்டியாளராக தான் இருந்து வந்தார்.

மக்கள் மனதில் இடம் பிடிக்க அவர் போராடியும் அவருக்கு அந்த இடம் கிடைக்கவில்லை என்று கூறலாம். இதனால் ஆதங்கமான மணிகண்டன் கமல் மேடையில் பேசும்போது கூட, தன் நண்பரிடம் ஏன் மக்கள் நான் பேசினால் கைதட்டவில்லை என்று மிகவும் வருத்தத்துடன் கூறி இருப்பார்.

தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் நான்கு முறை தொடர்ந்து தலைவராக இருந்த ஒரே ஒரு போட்டியாளர் மணிகண்டன் தான். மக்கள் மனதில் இடம்பெறவில்லை என்றாலும் அதிக வெறுப்பையும் இவர் சம்பாதிக்கவில்லை. எனவே இவர் பிக் பாஸ் இறுதி வாரம் வரை இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. வழக்கம் போல எதிர்பார்ப்பிற்கு மாறாக மணிகண்டன் வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் சீசன் 6ல் மணிகண்டனுக்கு 16 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது. பிக் பாஸ் இருந்து வெளியேறிய மணிகண்டன் தற்பொழுது பட வாய்ப்புக்காக பல முயற்சிகளை செய்து வருகிறார்.

இதையும் படிங்க : துணிவு டிரெய்லரால் ஆட்டம் கண்டுள்ள வாரிசு ..”தல”ன்னா சும்மாவா …??

Exit mobile version