Home CINEMA NEWS பிக்பாஸ் பிரபலம் சுரேஷ் சக்கரவர்த்தி திருமணத்தின் போது மனுஷன் எப்படி இருக்கிறார் பாருங்களேன்..!!! மனைவி மீது...

பிக்பாஸ் பிரபலம் சுரேஷ் சக்கரவர்த்தி திருமணத்தின் போது மனுஷன் எப்படி இருக்கிறார் பாருங்களேன்..!!! மனைவி மீது இவ்வளவு காதலா..!!!

suresh chakaravarthy wedding anniversary

பிக்பாஸ் மூலம் மக்களிடம் பிரபலமானவர் தான் சுரேஷ் சக்ரவர்த்தி இவர். வெளிநாடுகளில் உணவகங்கள் திறந்து அதனை நடத்தி வரும் சுரேஷ் தற்போது கோலிவுட் பக்கம் 20 ஆண்டுகளுக்கு பிறகு வந்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் என்ட்ரி கொடுத்தார் சுரேஷ் சக்ரவர்த்தி. போட்டியாளர்கள் இடம் ஒற்றுமையாக பேசுவதிலும், சரி சண்டை போடுவதிலும் சரி சுரேஷ் சக்ரவர்த்தி நன்றாக ஸ்கோர் செய்தார்.

பிக்பாஸ் தொடங்கியதிலிருந்து பிக்பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தவர் 35வது நாளில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவர் அடித்த லூட்டி பல மீம்ஸ் கிரியேட்டருக்கு கன்டன்ட் ஆக அமைந்தது.

இவரை வைத்து பல மீம்ஸ் வெளியானது அனைவரும் அறிந்த ஒன்றே. இன்று தனது 30வது திருமண நாளை கொண்டாடிய சுரேஷ் தனது மனைவியை இன்ஸ்டா வில் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அதில் முப்பது வருடம் மிக எளிதல்ல என்னுடன் வாழ்வதற்கு நன்றி சிக்கு என்று கூறிவிட்டு ஐ லவ் யூ என்று கூறியிருந்தார். அத்துடன் தனது திருமண புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார். இதனை பார்த்த சுரேஷ் சக்கரவர்த்தியின் ரசிகர்கள் அவருக்கு திருமண வாழ்த்து கூறி வருகின்றனர்.

Exit mobile version