Home NEWS தேர்தலில் என் தோல்விக்கு கட்சி நிர்வாகிகள் தான் காரணம் திடீர் என்று குண்டை தூக்கி போட்ட...

தேர்தலில் என் தோல்விக்கு கட்சி நிர்வாகிகள் தான் காரணம் திடீர் என்று குண்டை தூக்கி போட்ட எச் ராஜா..!!! நிர்வாகிகள் தொடர் ராஜினாமா..!!! அதிர்ச்சியில் பாஜகவினர்.

bjp h raja

பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சை பேச்சுகள் மூலம் பிரபலமானவர் அவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 3 லட்சத்து 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததை அடுத்து சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டார்.

இந்த தேர்தலிலும் தோல்வியை சந்தித்தார் இதனால் விரக்தியில் உள்ள எச் ராஜா தனது தேர்தல் தோல்விக்கு மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் தான் காரணம் என குற்றச்சாட்டையும் சிலரை மிரட்டியும் வந்ததாக தெரிகிறது இதனால் கட்சி நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எச் ராஜாவின் நடவடிக்கையை கண்டித்து காரைக்குடி நகர பாஜக தலைவர் சந்திரன் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இவரை தொடர்ந்து சாக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் ஆட்டோ பாலா கண்ணங்குடி, தேவகோட்டை, திருப்புவனம் நிர்வாகிகள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர் மேலும் மாவட்ட தலைவர் செல்வராஜ் தனது ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

நிர்வாகிகளின் தொடர் ராஜினாமாவால் சிவகங்கை மாவட்ட பாஜக கூடாரம் காலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது இதுகுறித்து பாஜக நிர்வாகிகள் கூறுகையில் எச் ராஜா தனது தோல்விக்கு என்ன காரணம் என்பதை சுய பரிசோதனை செய்யாமல் தனது தவறை மறைக்க எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார் தேர்தல் செலவுக்கு கட்சி வழங்கிய பல கோடி வரை முறைகேடு நடந்துள்ளது இதுகுறித்து தலைமைக்கு தெரிவித்து உள்ளோம் என்றனர்.

Exit mobile version