Home CINEMA NEWS அனிருத்துடன் சேர்ந்து கிண்டல் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த தொகுப்பாளினி பாவனா….!

அனிருத்துடன் சேர்ந்து கிண்டல் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த தொகுப்பாளினி பாவனா….!

பிரபல தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், பாய்ஸ் விசேஸ் கிரல்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தொகுப்பாளினி பாவனா. இவர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் முன்னரே ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார்.

இருப்பினும் விஜய் தொலைக்காட்சியே இவரை மிகவும் பிரபலமாக்கியது. இதன் பிறகு இவர் கிரிக்கெட் விளையாட்டு ஒளிபரப்பையும் தொகுத்து வழங்கினார். அண்மையில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழாவை இவர் தொகுத்து வழங்கினார்.

அப்படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் முகம் போலவே இவர் முகமும் உள்ளது எனவும் அனிருத்துக்கு பவுடர் மேக்கப் போட்டால் பாவனா மாறியே இருப்பார் எனவும் மீம்ஸ்கள் வெளிவந்தன, இதற்கு பதிலளித்த பாவனா என் முக சாயல் அனிருத் முக சாயலை போல் உள்ளதால் இதை நான் சம்மதிக்கிறேன், ஆனால் அதுபோலவே அனிருத் திறமையும் எனக்கு கிடைத்தால் நல்லதாக இருக்கும் என கூறியுள்ளார்.

Exit mobile version