Home NEWS ஆலம்பனா நான் உங்கள் குடும்ப அடிமை என்று தமிழக பள்ளித்துறை அமைச்சர் புகைப்படத்தை வெளியிட்டு ...

ஆலம்பனா நான் உங்கள் குடும்ப அடிமை என்று தமிழக பள்ளித்துறை அமைச்சர் புகைப்படத்தை வெளியிட்டு கிண்டல் செய்த அதிமுக முன்னாள் எம் எல் ஏ…!!!

anbil magesh poyyamozhi

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அமைச்சர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதை நாம் ஊடகத்தின் வாயிலாக அறிந்து கொண்டிருக்கிறோம். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தான் வாங்கிய மனுக்களுக்கு 100 நாட்களில் சரியான தீர்வை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக தனி குழு ஒன்று அமைத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கொரோனா கால கட்டம் என்பதினால் கொரோனவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை செய்து வருகிறது தமிழக அரசு. அமைச்சர்கள் அவரவர் அவர்களது பணியை சிறப்பாக செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நெருங்கிய நண்பருமான தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சென்னையில் பராமரிப்பற்ற நிலையில் கிடக்கும் மிகப் பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பராமரிக்கும் பணியை தொடங்க நடவடிக்கை எடுத்தார்.

கல்வி தொலைக்காட்சியில் இன்னும் எப்படி எல்லாம் மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை கொடுக்க முடியும் என்று ஆலோசித்து வருகிறார்.

கொரோனா காலகட்டத்தில் பள்ளிகளை உடனே திறக்க முடியாததால் மாணவ மாணவிகளுக்கு கல்வியை எப்படி கொண்டு சேர்க்கலாம் என்ற தீவிர ஆலோசனையில் உள்ளார்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சண்முகம் அவர்கள் தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் புகைப்படத்தை வெளியிட்டு ஆலம்பனா நான் உங்க குடும்ப அடிமை என்று நக்கலாக ட்விட் செய்துள்ளார்.

கமலஹாசனின் அலாவுதீன் அற்புத விளக்கு படத்தில் ஆலம்பனா நான் உங்க அடிமை என்று கமலிடம் அந்த பூதம் செல்லும் அதனை வைத்து கலாய்த்து உள்ளார்.

அதனைப் பார்த்த திமுகவினர் அடிமையை பற்றி யார் பேசுவது என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த இக்கட்டான சூழலில் அரசியல் சண்டைகளை விட்டுவிட்டு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது. அரசியல் சண்டைகள் வேண்டாமே

Exit mobile version