Home CINEMA NEWS நம்ம அண்ணாச்சி பட ஹீரோயினா இவங்க உடம்பெல்லா மண்ணை பூசிக்கிட்டு செஞ்ச வேலைய பாருங்க!!!

நம்ம அண்ணாச்சி பட ஹீரோயினா இவங்க உடம்பெல்லா மண்ணை பூசிக்கிட்டு செஞ்ச வேலைய பாருங்க!!!

Oorvasi

நடிகை ஊர்வசி ரவுத்தலா மண்ணை வாரி பூசிக்கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். மாடல் அழகியான ஊர்வசி பல அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று உள்ளார். அவர் பல பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். மேலும் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தற்போது ஹீரோவாக நடித்து வரும் திரைப்படத்தில் நடிகை ஊர்வசி அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அதேபோல் ஜேடி ஜெர்ரி இரட்டையர்கள் இயக்கிவரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்தப்படத்தில் ஐஐடியில் பணிபுரியும் மைக்ரோபயாலஜிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இணையத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார். அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் கூட நீச்சல் குளத்தில் பாம்புடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் பீதியில் ஆழ்த்தினார்.

தற்போது உடல் முழுவதும் மண் பூசிக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். மண் குளியலில் உடலில் உள்ள அசுத்தங்கள் வெளியேற்றி உடலுக்கு மற்றும் சருமத்திற்கு புத்துணர்ச்சியாக வைக்க உதவுகிறது. உடலில் உள்ள வலிகளை போக்க உதவுகிறது என்று ஊர்வசி கூறியுள்ளார். இந்த மண் குளியலுக்கு 20 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


Exit mobile version