Home CINEMA NEWS கட்டாயம் வந்தால் அரசியலில் இறங்குவேன் – ஓவியா ஓபன் டாக்.

கட்டாயம் வந்தால் அரசியலில் இறங்குவேன் – ஓவியா ஓபன் டாக்.

actress oviya open talk about politics

பிரபல நடிகை ஓவியா இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் களவாணி என்ற படத்தில் நடித்து பெரிய பிரபலமடைந்தவர் அதனைத் தொடர்ந்து ஏகப்பட்ட தமிழ் படங்களில் நடித்து வந்தார் ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சத்திற்கே சென்றார் ஓவியா.

எதையும் வெளிப்படையாக பேசக் கூடிய ஓவியாவிற்கு ஓவியா ஆர்மி என்ற பெயரில் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஓவியாவிற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து ரசிகர்கள் தமிழ் சினிமாவில் ஓவியா மறுபடியும் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்த்தார்கள் ஆனால் ஓவியா 90 ML என்ற ஒரு சர்ச்சை படத்தில் நடித்து சிக்கலில் மாட்டிக்கொண்டார்.

அதனை தொடர்ந்து காஞ்சனா 3 , களவாணி 2 என்ற படத்தில் நடித்து வந்த ஓவியா அடிக்கடி ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டு வருவார் அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு இந்திய பிரதமர் மோடி அவர்கள் சென்னை வரும் போது #GOBACKMODI என்ற ஹாஸ்டகை ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டு எதிர்ப்பை தெரிவித்து இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் பிரதமர் மோடி அவர்களுக்கு எதிராக போஸ்டர் ஓடியவர்களை கைது செய்ததை கண்டித்து ஓவியா ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். ரசிகர்களுடன் டுவிட்டரில் தொடர்பில் இருக்கும் ஓவியா சமூக பிரச்சினைக்கும் குரல் கொடுத்து வருகிறார் சமீபத்தில் இந்த விஷயங்கள் பற்றி ஓவியாவிடம் பிரபல யூடியூப் சேனல் ஒன்று பேட்டி எடுத்தார்கள்.

அப்பொழுது ஓவியாவிடம் அரசியலில் இறங்க போறீங்களா என்று பேட்டியாளர் கேட்க எனக்கு வயது 30 ஆகிறது நானும் வெளி உலகத்தை பார்க்கிறன் சில விஷயங்கள் தவறாக படுகிறது தவறாகபடும் விஷயத்தை நான் ட்விட்டர் வழியாக தெரிவிக்கிறேன் ட்விட்டரில் கருத்துக்களை வெளிப்படையாக கூறுகிறேன். இவ்வளவு நாள் ஏதோ வாழ்க்கை வாழ்ந்து விட்டேன் இனி சமூகத்திற்காக வாழலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

அரசியலில் இறங்காமலேயே நல்லது செய்யலாம் அதை மீறி அரசியலில் இறங்கி தான் நல்லது செய்ய வேண்டும் என்ற கட்டாயம் வந்தால் அரசியலில் இறங்குவேன் என்று கூறியுள்ளார் ஓவியா.

Exit mobile version