Home NEWS நடிகை மீரா மிதுனை கேரளாவில் சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்…!!! வைரல் வீடியோ...

நடிகை மீரா மிதுனை கேரளாவில் சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்…!!! வைரல் வீடியோ இதோ.

Meera mitun

பட்டியலினத்தவரை தவறாக பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாடலிங் துறையை சேர்ந்தவர் மீராமிதுன். ஒரு சில சினிமாக்களில் துணை நடிகையாக தலைகாட்டி உள்ளார். அதற்குப் பிறகு மாடலிங் துறையிலும் சினிமா வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் அவ்வப்போது தனது சமூக வலைத்தள கணக்குகளில் யாரையாவது வம்பில் மாட்டிக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

நடிகர்கள் விஜய், சூர்யா, கமல் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் குறித்தும் அவர்களுடைய குடும்பத்தினர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி அவரது ரசிகர்களிடம் சிக்கிக் கொண்டார். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் மீராமிதுன் பேசி வெளிவந்திருந்த வீடியோவில் பட்டியலின வகுப்பை சேர்ந்த மக்களை பற்றி அவதூறாக பேசி இருந்தார்.

அதில் பட்டியலின மக்கள் தான் மோசமானவர்கள் என்றும் அவர்கள் தான் குற்ற செயல்களில் அதிகமாக ஈடுபடுகிறார்கள் என்றும் பேசிய வீடியோ இணையத்தில் பலராலும் பகிரப்பட்டது. மேலும் திரை உலகில் இருக்கும் குறிப்பிட்ட சமூகத்தை இயக்குனர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் பேசிய வீடியோவிற்கு பல தரப்பிலும் கண்டனம் எழுந்தது. மதுரை, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினர் புகார் அளித்தனர்.

அதேபோன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு சென்னை மத்திய குற்றப்பிரிவு கொடுத்த புகாரில் சாதி மோதலை தூண்டும் வகையில் பேச்சு உள்ளது. இதனால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீசார் கலகம் செய்யத் தூண்டுவது, சாதி, மத விரோதத்தை தூண்டுவது, இருபிரிவினரிடையே மோதலை உருவாக்குவது, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் மீராமிதுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளனர். இதனால் அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் அவர் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் போலீசார் கைதுசெய்யும் பொது காப்பாற்றுங்கள் போலீசாரிடம் இருந்து காப்பாற்றுங்கள் என வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Exit mobile version