Home NEWS தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து முதலமைச்சர்...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கினார்.

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு நாளைக்கு தொற்றாக 33 ஆயிரம் மேல் தொற்று பாதிக்கப்படுகிறது. அதனால் தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தி வருகிறது.

இந்த வாரம் முதல் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை,காய்கறி போன்ற கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார்.அவர் பதவி ஏற்ற உடனே மக்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்து அமல்படுத்தனர்.


தற்போது கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 கொடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை கேட்டு அறிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி மூவரும் சேர்ந்து பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி கொடுத்துள்ளனர். அதேபோல் நடிகர் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் 25 லட்சம் ரூபாய் கொடுத்து உள்ளனர்.

திரைப் பிரபலங்கள் மட்டும் அல்லாமல் அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் போன்றோர் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை கொடுத்து வருகின்றனர். இன்று நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து ரூ.50 லட்ச ரூபாய் பொது நிவாரண நிதியாக கொடுத்துள்ளார். முன்பு ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஒரு கோடி ரூபாய் கொரோனா பொது நிவாரண நிதிக்கு கொடுத்திருந்தார்.

Exit mobile version