Home CINEMA NEWS நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் பதக்கம் வென்று சாதனை…!!! குவியும் பாராட்டுகள்.

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் பதக்கம் வென்று சாதனை…!!! குவியும் பாராட்டுகள்.

madhavan

நடிகர் மாதவனின் மகன் சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் தேசிய, சர்வதேச அளவில் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு பல பதக்கங்களை குவித்து வருகிறார். அந்த வகையில் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான டேனிஷ் ஓப்பன் நீச்சல் போட்டியில் பங்கேற்றார்.

இந்த போட்டியில் 10 பேர் கலந்து கொண்டனர். மேலும் 1500 மீட்டர் பிரிவில் இறுதி சுற்று போட்டியில் 10 பேர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் பங்கேற்று இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். அதேபோல் கடந்த ஆண்டு லாத்வியன் ஓபன் நீச்சல் போட்டியில் கலந்துகொண்ட வேதாந்த் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

மேலும் பல தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று 7 பதக்கங்களை வென்று அசத்தியிருந்தார். அதேபோல் டேனிஷ் ஓபனில் ஆடவருக்கான 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் இந்தியாவின் முன்னணி நீச்சல் வீரரான சாஜன் பிரகாஷ் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

முதலிடம் பிடித்த வீரரும் வேதாந்த்தும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது. இந்த இவரின் வெற்றியை மகிழ்ச்சியோடு ட்விட்டர் பக்கத்தில் நடிகர் மாதவன் கடவுளின் கருணையால், அனைவரின் ஆசீர்வாதத்தால் இவர்கள் இருவரும் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று உள்ளதாக பதிவில் கூறியுள்ளார்.

மேலும் பயிற்சியாளர் பிரதீப் குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இவர்களை பாராட்டும் விதமாக நடிகர் சூர்யாவும் இரு இளம் நீச்சல் வீரர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Exit mobile version