Home NEWS 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத பயமா..!!! ஒரு மிஸ் கால் கொடுங்க கவலைய விடுங்க.

10 ஆம் வகுப்பு தேர்வு எழுத பயமா..!!! ஒரு மிஸ் கால் கொடுங்க கவலைய விடுங்க.

10th exam consultation

கொரோனா நோய் தொற்றால் நாடு முழுதும் ஊரடங்கு விதிக்கப்பட்டு இருந்தது. தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக ஊரடங்கை தமிழ் நாட்டில் தளர்த்து வருகிறார்கள். கொரோனா பரவலை கட்டுக்கு கொண்டுவருவதற்காக தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்க அனுமதி கொடுக்காமல் இருந்தார்கள். இந்நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் தள்ளிப்போனது. இந்த தேர்வு முக்கியமான தேர்வு என்பதால் இதனை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்று முடிவு செய்த அரசு வருகின்ற ஜூன் 15 தேதி ஆரம்பித்து 25 தேதி வரை தேர்வுகளை நடத்தி முடிக்க தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நேரத்தில் தேர்வை எப்படி எதிர் கொள்ளவது, பயம் இல்லாமல் தேர்வை எப்படி எழுதுவது போன்ற விஷயங்களை மாணவர்களுக்கு ஆலோசனை கொடுக்க தமிழக கல்வித்துறை , யுனிசெப் மற்றும் நாளந்தாவே அறக்கட்டளை சேர்ந்து “TAKE IT EASY” என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது.

தேர்வு எழுத உள்ள மாணவர்கள் நம்பிக்கை கொடுக்கும் விதத்தில் இந்த ஆலோசனை நிகழ்ச்சி இருக்கும் என்று கூறப்படுகிறது. தேர்வு எழுத போகும் மாணவர்கள் “9266617888” என்ற எண்ணிற்கு மிஸ் கால் கொடுத்தால் போதும் மாணவர்களுக்கு ஆலோசனை கொடுப்பார்கள்.

Exit mobile version