Home NEWS பத்தாம் வகுப்பு FAIL ஆன மாணவன் பிளஸ் 2 முடித்த போது சிக்கினான்…!!!

பத்தாம் வகுப்பு FAIL ஆன மாணவன் பிளஸ் 2 முடித்த போது சிக்கினான்…!!!

Student

பத்தாம் வகுப்பு ஃபெயிலான மாணவர் மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்து அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்த பிளஸ் 1 பிளஸ் 2 முடித்தார். அவருக்கு பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிட பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை ஆய்வு செய்த போது திருத்தம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் இடைப்பாடி வெள்ளார் நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவர் இவர் 2018 – 2019 கல்வியாண்டில் இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார்.

தேர்வு முடிவில் ஆங்கிலப் பாடத்தில் 31 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறவில்லை. ஆனால் மதிப்பெண் சான்றிதழில் 31 மதிப்பெண் என்பது 35 மதிப்பெண் ஆகவும் “பெயில்” எனும் F என்பதை “பாஸ்” என்பதற்கான P என்றும் திருத்தம் செய்து அவர் படித்த அதே பள்ளியில் சேர்ந்தார் இரண்டு ஆண்டுகளாக பிளஸ் 1 பிளஸ் 2 வகுப்பு படித்து வந்தார். பிளஸ் டூ தேர்வு நடப்பு கல்வி ஆண்டில் தேர்வு நடக்கவில்லை. பிளஸ்2 மதிப்பெண் கணக்கிட பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை கடந்த வாரம் ஆசிரியர்கள் ஆய்வு செய்தனர்.

அதில் மாணவர் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் திருத்தம் செய்தது தெரிந்தது இது தொடர்பாக அந்த மாணவனிடம் ஆசிரியர்கள் விசாரித்தனர். நேற்று இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இடைப்பாடி மாவட்ட கல்வி அலுவலர் விஜயா விசாரித்தார். பள்ளியில் சேரும் போது மாணவர் கொடுத்த மதிப்பெண் சான்றிதழை ஆய்வு செய்தார். தலைமை ஆசிரியர் கீதாராணி மற்ற ஆசிரியரிடமும் விசாரணை நடந்தது.

Exit mobile version