Home CINEMA NEWS பிரபல முன்னணி நடிகையுடன் நடிக்கும் ரித்து ராக்ஸ் ரித்விக்..!!! முதல் படத்திலே அடித்த ஜாக்பாட்..!!! ...

பிரபல முன்னணி நடிகையுடன் நடிக்கும் ரித்து ராக்ஸ் ரித்விக்..!!! முதல் படத்திலே அடித்த ஜாக்பாட்..!!! படத்தின் பெயர் என்ன தெரியுமா?

நயன்தாரா தமிழ் சினிமாவில் ஒரு நடிகை ஒரு வருடம் இரண்டு வருடம் தாக்குப் பிடிப்பதே பெரிய விஷயமாக கருதப்படும் இந்த நேரத்தில் கிட்டத்தட்ட 11 வருடங்களுக்கு மேல் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஒரு தனியார் டிவி சேனலில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஆதரவை தமிழுக்கு இயக்குனர்களில் ஐயா என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். முதல் படத்திலேயே ரசிகர்களை யாருடா இந்த கேரளத்து புதுவரவு என்று உற்று நோக்க வைத்த நயன்தாரா அதனைத் தொடர்ந்து சரியான படங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்தார்.

சிம்புவை தீவிரமாக காதலித்து வந்த நயன்தாரா சில நெருக்கமான காட்சிகளில் வல்லவன் படத்தில் நடித்திருந்தார் அதன்பின் சில வருடங்களிலேயே சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தார்கள். தளபதி விஜயின் வில்லு படப்பிடிப்பின்போது நயன்தாராவிற்கும் வில்லு படத்தின் டைரக்டருமான பிரபுதேவா விற்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது ஏற்கனவே பிரபுதேவாவிற்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கும் நிலையில் நயன்தாரா அவரை திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளிவந்தது.

பிரபுதேவாவுடன் நயன்தாராவை இனி பார்த்தால் என்ன செய்வேன் என்று தெரியாது என்று ஆவேசமாக பேட்டியும் கொடுத்தார் பிரபு தேவாவின் மனைவி. நயன்தாராவை தனது கையில் பிரபு என்று பச்சை குத்திக் கொண்டார் அந்த அளவிற்கு காதலித்த நயன்தாரா ஒரு சில பிரச்சனைகளால் பிரபுதேவாவை விட்டுப் பிரிந்தார்.

அதன் பின் மனம் நொந்து போன நயன்தாரா நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் கஷ்டப்பட்டு நடித்து முன்னணி நடிகையாக மட்டுமல்லாமல் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றார். அப்போது நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்தார் நயன்தாரா அந்தப் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலித்து வந்தார்.

பல வருடங்களாக ஒன்றாக வெளிநாடுகள் சுற்றி வந்த விக்னேஷ் சிவன் நயன்தாரா பல கோவிலுக்கு சென்று பரிகாரங்கள் செய்தபின் சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள். விரைவில் நடிகர் விக்னேஷ் சிவன் அவர்களுடன் திருமணம் நடக்க உள்ள நிலையில் அடுக்கடுக்காக படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார்.

Aramm Movie Actress Nayanthara Cute Expression Images

தற்பொழுது ஹீரோவே இல்லாமல் நயன்தாராவை வைத்து படம் எடுக்கவும் தயாராகி விட்டார்கள் தயாரிப்பாளர்கள். அறம், மாயா படங்கள் கொடுத்த வெற்றிக்குப் பிறகு நயன்தாராவை மட்டும் வைத்து படங்கள் இயக்கி வருகிறார்கள் இயக்குனர்கள். சமீபத்தில் கனெக்ட் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து தற்போது நயன்தாரா o2 என்ற படத்தில் நடிக்கிறாராம் அந்தப் படத்தை ஜி கே விக்னேஷ் அவர்கள் இயக்க ட்ரீம் வாரியர் தயாரிக்க உள்ளார்கள்.

இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் யூடியூபே அதிரவைத்த சிறுவன் ராக்ஸ்டார் ரித்விக் நடிக்கிறார். யூடியூபில் வீடியோக்கள் வெளியிட்டு அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட க்யூட் சிறுவன் தற்போது முன்னணி நடிகையான நயன்தாராவுடன் நடிக்க போகிறார் என்பது அவரது பெற்றோர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களுக்கும் சந்தோஷம்.

o2 திரைப்படம் விரைவில் OTT தளத்தில் நேரடியாக வெளியாகும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

Exit mobile version