Home NEWS உலகின் கடைசி ஒரே ஒரு வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது எதற்காக..??

உலகின் கடைசி ஒரே ஒரு வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது எதற்காக..??

உயிரினங்களை பாதுகாப்பது மனிதனின் தலையாய கடமை. காட்டில் விலங்குகள் வாழ்ந்ததால் நாட்டில் மனிதர்கள் வாழ வேண்டும் என்று பலர் கூறியுள்ளனர் .

இந்நிலையில் தற்போது பல விலங்குகள் அழிவை சந்தித்து வருகின்றன. அதுபோல தற்போது வடகிழக்கு கென்யாவில் இருக்கும் உலகின் கடைசி ஒரே ஒரு வெள்ளை ஒட்டகசிவிங்கியை வேட்டையாடுவதில்
இருந்து காப்பாற்றுவதற்காக அது உடலில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது .

தனியாக இருக்கும் அந்த வெள்ளை ஒட்டகச்சிவிங்கி எப்பொழுது எங்கு இருக்கும் என்பதை வனத்துறை அதிகாரிகள் அறிந்து கொள்வதற்காக இந்த கருவி உதவும் என்று இயற்கை வள பாதுகாப்பு பாதுகாப்பு குழு அறிவித்துள்ளது .

அரிதான ஒரு மரபணு மாற்றத்தால் இந்த ஒட்டகச்சிவிங்கி வெள்ளை நிறத்தில் உள்ளது. கடந்த மார்ச் மாதம் இதன் குடும்பத்தை வேட்டையாடுபவர்கள் கொன்றுவிட்டனர். இதே வெள்ளை நிறத்தில் ஒரு பெண் ஒட்டகசிவிங்கி யும் அதன் குட்டியும் கொல்லப்பட்டுள்ளது. இதனால் எழுந்த அச்சம் காரணமாக இதற்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் தான் கென்யாவில் முதல் முதலாக வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள் இருப்பது தெரியவந்தது. ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் ஒட்டகச்சிவிங்கிகள் பெரும்பாலும் மாமிசம் மற்றும் உடல் பாகங்கள் வேட்டையாடப்படுகின்றன. இந்த ஒட்டகச்சிவிங்கியை பாதுகாப்பதில் இயற்கை ஆர்வலர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Exit mobile version