Home NEWS இனி 5000 ரூபாய்க்கு மேல் EMI கட்டணங்களை வங்கிக்கணக்கில் இருந்து வாடிக்கையாளர் அனுமதி இல்லாமல் பணம்...

இனி 5000 ரூபாய்க்கு மேல் EMI கட்டணங்களை வங்கிக்கணக்கில் இருந்து வாடிக்கையாளர் அனுமதி இல்லாமல் பணம் பிடித்தல் கூடாது – ரிசர்வ் வங்கி.

autopayment not allowed above 5000rs

நமது வங்கிக் கணக்கில் இருந்து மாதம்தோறும் நாம் கட்டும் தவணையை ஆட்டோ பேமெண்ட் முறையில் அந்தந்த நிறுவனங்களே நமது வாங்கி கணக்கில் இருந்து எடுத்து வந்தது.

தற்பொழுது வாடிக்கையாளர்களின் நலன் கருதி ஆட்டோ பேமண்ட் முறையில் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.

வங்கிகள் மற்றும் நிதி சேவை நிறுவனங்கள் வழங்கும் சேவைக்கான கட்டணத்தை தவணை முறையில் பெறுகிறார்கள். வாடிக்கையாளர்கள் அனுமதியின்றி அவர்கள் கட்ட வேண்டிய தொகையை தாமாகவே வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பிடித்தம் செய்கிறார்கள்.

அதுபோல் செய்வது முறையல்ல என்று இம் மாதம் முதல் தேதியிலிருந்து ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி 5000 ரூபாய்க்கு மேற்பட்ட பண பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர்களின் அனுமதி பெற்றபிறகே அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்ய முடியும் என்று அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் பணத்தைப் பிடித்தம் செய்வதற்கு 5 நாட்களுக்கு முன்பே வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் ஒப்புதல் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யக் கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Exit mobile version