Home CINEMA NEWS வடிவேலை அடித்தார்கள் விஜயகாந்த் ஆட்கள்..!!! பிரச்சனை இது தான் வெளிப்படையாக போட்டு உடைத்த பிரபலம்.

வடிவேலை அடித்தார்கள் விஜயகாந்த் ஆட்கள்..!!! பிரச்சனை இது தான் வெளிப்படையாக போட்டு உடைத்த பிரபலம்.

vadivelu vijayakanth problem thiyagu interview

நகைச்சுவை நடிகர் வடிவேலு பிறரை சிரிக்க வைக்கும் ஒருவர் கெட்டதில்லை என்பார்கள் ஆனால் நடிகர் வடிவேலுவை பொருத்தவரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிரிக்க வைத்த ஒரு நடிகர்.

எந்த ஒரு கவலையான நேரத்திலும் வடிவேலு அவர்களின் நகைச்சுவை காட்சிகளை பார்த்தால் நம்மை அறியாமலேயே சிரிப்பு வரும். அதுபோல படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் வடிவேலு அவர்கள் செய்யும் லூட்டிகளை பார்த்து படக்குழுவினரை விழுந்து விழுந்து சிரிப்பார்களாம். அப்படிப்பட்ட மனிதனை தற்பொழுது ஏன் தமிழ் சினிமா படவாய்ப்புகள் கொடுக்காமல் உள்ளது ஏன் வடிவேலு சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார் என்று பல கேள்விகள் ரசிகர்கள் இடையே இருந்து வருகிறது.

சமீபத்தில் ஒரு பிரபல யூடியூப் சேனல் ஒன்று நடிகர் தியாகு அவர்களிடம் பேட்டி எடுத்தார்கள் தியாகு கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும் நெருக்கமானவர் வடிவேலுகும் நெருக்கமானவர். விஜயகாந்த் வடிவேலுக்கு இடையே மோதல் ஏற்பட்டது உண்மையா என்று அந்த நிகழ்ச்சியில் பேட்டியாளர் கேட்க அதற்கு தியாகு அளித்த பதில் உண்மைதான் வடிவேல் விஜயகாந்துக்கு குடை பிடித்தவர் கை கால் அமுக்கி விட்டவர் ஒருநாள் சம்பளம் அப்பொழுது 250 ரூபாய் வாங்கினார். அதன்பின் கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது சினிமாவில் பெரிய நகைச்சுவை பிரபலமானார் வடிவேல்.

விஜயகாந்த் வீட்டிற்கு பக்கத்திலேயே அவரும் வீடு வாங்கினார். ஒரு நாள் விஜயகாந்த் அவர்களுக்கு நெருக்கமானவர் ஒருவர் இறந்து இறந்து விட்டார் அதனால ஊர்க்காரங்க எல்லாரும் காரை எடுத்துக்கொண்டு சாலிகிராமம் வந்துட்டாங்க அப்போ வரிசையாக அந்த தெருவில் காரை நிறுத்தியிருந்தார்கள் அப்பொழுது வடிவேலு வீட்டிற்கு அருகே ஒரு சிலர் காரை நிறுத்தி இருந்தார்கள்.

இதைப் பார்த்து கடுப்பான வடிவேல் இங்கு கார் எல்லாம் நிறுத்தக்கூடாது என்று கூறியிருக்கிறார் அதற்கு அந்த காரில் இருந்தவர்கள் நாங்கள் விஜயகாந்தை பார்க்க வந்திருக்கிறோம் ஒரு துக்கத்துக்கு வந்திருக்கோம் என்று கூற நீங்கள் யாரை வேணாலும் பார்க்க வாங்க இங்கு கார் நிப்பாட்ட கூடாது என்று கூறியிருக்கிறார்.

உடனே செம டென்ஷன் ஆன அந்த கும்பல் வடிவேலை அடிக்கத் தொடங்கினார்கள் அதன்பின் இரவு நேரத்தில் திடீரென்று வடிவேல் என்னை அழைத்து அண்ணா இது மாதிரி விஜயகாந்த் ஆளுங்க என்ன அடிச்சுட்டாங்க என்று கூறினார் உடனே அந்த நேரத்தில் தமிழக முதலமைச்சராக இருந்த ஐயா கலைஞர் அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன் தொடர்பு கொண்டு வடிவேலுக்கு கொஞ்சம் பிரச்சனை கொஞ்சம் பாருங்க ஐயா என்றேன் உடனே சற்றுநேரத்தில் ஸ்டாலின் என்னை அழைத்தார் நீங்கள் என்னிடமே இதெல்லாம் கூறி இருக்கலாமே எதற்கு அப்பாவிடம் சென்றீர்கள் என்று கூறிய அவர் அதன்பின் வடிவேலு அந்தப் பிரச்சினையிலிருந்து வெளிவந்தார் என்று கூறியவர் காசு வந்தவுடன் சிலர் மாறுகிறார்கள்.

கட்சியில் மேடை பிரச்சாரத்திற்கு கூப்பிடுகிறார்கள் என்று என்னிடம் சொன்னான் வடிவேலு அதற்கு உனக்கு நல்ல பாடி லாங்குவேஜ் இருக்கு நகைச்சுவைத் திறன் இருக்கு இதெல்லாம் வேண்டாம் என்றேன் அப்புறம் திமுக கட்சியில் இணைந்து பிரச்சாரத்தை மேற்கொண்ட வடிவேலு விஜயகாந்தை கண்டபடி திட்டி பிரச்சாரத்தை தொடங்கினான். அந்தத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது அதிமுக ஜெயித்தது.

அதன்பின் நிறைய தயாரிப்பாளர்கள் வடிவேலுவை ஒதுக்க ஆரம்பித்தார்கள் என்று கூறினார்.

Exit mobile version