Home FULLY FACT வணக்கம் சொல்வது நமது முன்னோர்களின் முறை..!!! வணக்கம் சொல்வதின் அர்த்தம் இது தான்..!!!

வணக்கம் சொல்வது நமது முன்னோர்களின் முறை..!!! வணக்கம் சொல்வதின் அர்த்தம் இது தான்..!!!

vannakam meaning

வணக்கம் கூறுவது நமது பரம்பரை சொத்து என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். நாம் காலப்போக்கில் வணக்கம் சொல்லும் பழக்கத்தை மறந்து விட்டு வருகிறோம். பாரத பரம்பரையின் மூலைக் கல்லாக விளங்குவது மரியாதை.

ஒரு நபரை ஒரு நாளில் முதலாவதாக சந்திக்கும்போது அல்லது பல நாட்களுக்குப் பின்பு சந்திக்கும் போது வணக்கம் கூறி வாழ்த்தி வரவேற்பது தான் வழக்கம்.

விருந்தினர் வரும்போது நம் இருக்கையிலிருந்து எழுந்து வணங்கி வரவேற்று அமரச் செய்த பின்னரே நாம் அமர்வது வழக்கம். அதுபோல விருந்தினர் விடைபெறும் போது வாசல் வரை சென்று வழி அனுப்பி வருவது நம் வழக்கம் ஆனால் காலம் மாறிக் கொண்டே போகிறது வருங்கால சந்ததியினர் நமது முன்னோர்கள் பழக்கவழக்கத்தை மறக்காமல் இருக்க வேண்டும்.

இரண்டு கைகளும் சேர்த்து தலைகுனிந்து நமஸ்தே என்று சொல்லும்போது என்ன பொருள் என்றால் ந என்பது இல்லை என்றும், ம என்பது என்னுடையது என்றும், தே என்பது உங்களுடையது என்றும் ஆகும்.

அதாவது என்னுடையதாக காணும் இவ்வுடல் என் சுய லாபத்துக்காக அல்ல என்றும் உங்கள் சேவைக்கு ஆனது என்று பொருளாம். தன்னை விட தாம் முன் நிற்கும் நபருக்கே உயர்வளிக்கும் பண்பு.

வணக்கம் சொல்லும் முறை நமது கலாச்சாரத்தில் முக்கியமான ஒன்று இதனை நம் மறக்காமல் நாமும் கடை பிடித்து நமது வருங்கள சங்கதியினர்க்கும் சொல்லி தர வேண்டும்.

இதுபோன்ற செய்திகளை மறக்காமல் ஷேர் செய்யுங்கள் அது பிறருக்கு உபயோகமாக இருக்கும்.

Exit mobile version