Home CINEMA NEWS சித்ராவின் மரணத்தை முன்கூட்டியே கணித்தது போல இருக்கிறது அவரது கடைசி படத்தின் ட்ரைலர்..!!!

சித்ராவின் மரணத்தை முன்கூட்டியே கணித்தது போல இருக்கிறது அவரது கடைசி படத்தின் ட்ரைலர்..!!!

vj chitra calls trailer

விஜே சித்து மக்கள் தொலைக்காட்சியில் பணி புரிந்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மாற்றிக்கொண்டு பல நிகழ்ச்சியில் பங்கேற்று கடைசியில் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரின் மூலமாக முல்லை கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் மாபெரும் வரவேற்பை மக்கள் இடம் மாபெரும் வரவேற்பை பெற்ற நடிகை.

முல்லை என்ற கதாபாத்திரம் சித்ராவை பட்டி தொட்டி எங்கும் அடையாளம் காணப்படும் நடிகையாக பிரபலப்படுத்தியது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் தனது காதல் கணவருடன் தங்கியிருந்தார் அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சித்ராவின் காதல் கணவர் ஹேமந்த் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர் போலீசார். ஹேமந்த் நல்லவரே இல்லை பல பெண்களை ஏமாற்றி உள்ளார் என்றெல்லாம் அதன்பின்தான் செய்திகளே வெளியில் வந்தது. சமீபத்தில் ஹேமந்த் அதைப்பற்றி அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவரே பல திடுக்கிடும் தகவல்களை கூறியிருந்தார்.

சித்ராவின் இறப்பில் உள்ள மர்மம் குறித்து இன்றுவரை ஏதாவது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது இந்நிலையில் சித்ரா அவர்கள் கடைசியாக நடித்த கால்ஸ் என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் ஒன்று வெளியாகி உள்ளது.

அந்த ட்ரெய்லரின் தொடக்கத்திலேயே இந்த உலகத்துல நானும் பல கனவுகளோடு பொறந்து இருக்கேன் எனக்கும் பல ஆசைகள் தேவைகள் எல்லாம் இருக்கு அது யாருக்குமே புரியலை என்று சித்ரா அழுவது போல ஆரம்பமாகிறது அதன் பின் வரும் காட்சிகள் கால் சென்டரில் பணியாற்றும் ஒரு பெண்ணை ஐந்து பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவர்களை பற்றிய படமாக தெரிகிறது.

இந்த ட்ரெய்லரில் வரும் சில காட்சிகள் உண்மையிலே சித்ராவின் மரணத்தை முன்கூட்டியே கூறியபடி அமைந்துள்ளது. ஒரு காட்சியில் ஒரே பொண்ணு பொத்தி பொத்தி வளர்த்தேன் என்று அந்த பெண்ணின் அம்மா அழுவது போலவும், அம்மா அப்பா கிட்டே எல்லா விஷயத்தையும் சொல்றீங்க பண்ணுறீங்க ஆனால் ஏதோ முக்கியமா சொல்லனுமா அதைவிட்டு இருக்கீங்க என்ற வசனங்கள், இது கண்டிப்பா இயற்கை மரணம் கிடையாது கொலைதான் என்ற வசனம், அந்த ஆளு மட்டும் என் வாழ்க்கையில வரலைன்னா நானும் இந்த உலகத்துல ஒரு சராசரி மனிதன் வாழ்ந்து இருக்குமோ என்னமோ என்று சித்ரா கூறும் வசனம் இது அனைத்தும் முன்கூட்டியே கணித்து போல இருக்கிறது கால் படத்தின் ட்ரைலர்.

தற்பொழுது சித்ராவின் கடைசி படமான கால்ஸ் படத்தின் டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version