Home CINEMA NEWS கணவரை விவாகரத்து செய்ய நினைத்த விஜே அர்ச்சனா…!!! அதிர்ச்சியில் திரையுலகினர்.

கணவரை விவாகரத்து செய்ய நினைத்த விஜே அர்ச்சனா…!!! அதிர்ச்சியில் திரையுலகினர்.

சின்ன திரையில் பிரபல தொகுப்பாளனியாக வலம் வருபவர் வி ஜே அர்ச்சனா. சன் டிவியில் தனது கேரியரை தொடங்கி அர்ச்சனா தனது விடா முயற்சியால் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய உள்ளார்.

வி ஜே அர்ச்சனா தற்போது ரேடியோவில் ஆர்ஜேவாக பணியாற்றி வருகிறார். அது மட்டுமல்லாமல் youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார் இந்த youtube சேனலில் வரவேற்பு ஒரு பக்கம் இருந்தாலும் ட்ரோல்கள் இன்னொரு பக்கம் என பல விதமான ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

அர்ச்சனாவின் கணவர் வினீத் தற்போது இந்திய கடற்பணியில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் வெளியான பேட்டியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அர்ச்சனா மற்றும் வினீத் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக அதிர்ச்சியான தகவலை தெரிவித்து இருக்கிறார்.

இருவரும் வெவ்வேறு துறையில் இருப்பதால் பிரச்சனை வந்தது. அதனால் ஒரு மாதத்திற்கு முன்பு பிரியலாம் என முடிவு செய்திருந்தோம். ஆனால் 15 நாட்களுக்கு முன்பு கணவர் வினித்தை திடீரென விசாகப்பட்டினத்திற்கு ட்ரான்ஸ்ஃபர் போட்டுவிட்டார்கள். மேலும் என் மகள் சாரா இருவரிடமும் பேசினார்.

ஒருவரை விட்டு ஒருவரால் இருக்க முடியுமா என யோசித்துக் கொள்ளுங்கள் எனக் கூறினாள். 20 வருடங்களுக்கு முன்பு எப்படி சந்தித்து காதலித்தோமோ அதே போல் தற்போது 15 நாட்களாக இருந்து வருகிறோம் என அர்ச்சனா பேட்டியில் கூறியுள்ளார்.

Exit mobile version