Home NEWS ஒரு கோடி சப்ஸ்கிரைபர் பெற்ற Village Cooking Channel: ரூ.10 லட்சம் கொரோனா நிவாரண நிதி..!!!...

ஒரு கோடி சப்ஸ்கிரைபர் பெற்ற Village Cooking Channel: ரூ.10 லட்சம் கொரோனா நிவாரண நிதி..!!! குவியும் பாராட்டுக்கள்.

village cooking channel

உலகம் முழுவதும் யூடியூபர்ஸ் அதிகமாகிக் கொண்டே போகிறார்கள் அவர்களது திறமையை இருந்த இடத்தில் இருந்தே வெளி உலகத்திற்கு காட்ட யூடியூப் வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது. யூடியூப் சேனலை தவறாக பயன்படுத்துபவர்கள் சிலர் இருந்தாலும் பலர் நல்ல கருத்துக்களையும் டெக்னாலஜி சம்பந்தமான செய்திகளையும் குறிப்பாக சமையல் நிகழ்ச்சிகளையும் செய்து வருகிறார்கள்.

ஒரு கோடி சப்ஸ்கிரைபர் கடந்த முதல் தமிழ் சேனல் என்ற பெருமையை பெற்ற வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர் பெற்று உள்ளனர். கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சர் ஸ்டாலினிடம் 10 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்கள் வில்லேஜ் குக்கிங் சேனல் டீம்.

தொழில்நுட்ப உலகில் யூடியூப் சேனலில் பார்வையாளர்களாக மட்டுமே இருந்த பலரும் இன்று பல லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டும் உரிமையாளர்களாக மாறியுள்ளனர் அந்த வகையில் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் ஒரு கோடி சப்ஸ்கிரைபர் கடந்த முதல் தமிழ் யூடியூப் சேனல் என்ற பெருமையை பெற்றுள்ளது 6 பேர் கொண்ட குழுவினரின் வில்லேஜ் குகிங் சேனல்.

முதன்முறையாக 2018ஆம் ஆண்டு யூடியூப் சேனலை தொடங்கி சமையல் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வந்தனர் இந்த டீம். இவர்கள் அனைவரும் விவசாயிகள். பெரிய தம்பி என்ற பெரியவரே இந்த டீமுக்கு காட்பாதர். கிராமத்து இளைஞர்களின் பேச்சு மண் மணம் மாறாத பாரம்பரிய சமையல் முறை சிறந்த வழியில் பிரம்மாண்ட அளவில் சமையல் செய்வது என்று கலக்கும் இவர்கள் உலக அளவில் ஒரு கோடி ரசிகர்களின் மனங்களை வென்று உள்ளனர்.

காங்கிரஸ் கட்சி தலைவர் எம்பி ராகுல் காந்தியே நேரில் சென்று இவர்களை வாழ்த்தும் அளவுக்கு பிரபலம் அடைந்தனர்.

1 கோடியை ஏத்தியதால் டைமண்ட் பட்டன் அங்கீகாரம் அளித்து அவர்களை பெருமைப்படுத்தி உள்ளது யூடியூப் நிறுவனம். அப்போது பேசிய பெரிய தம்பி என்ற பெரியவர் பேசியது நான் 26 வயதில் சமையல் செய்ய ஆரம்பித்தேன் தற்பொழுது வயது 75 ஆகிறது இந்த வயசுல நான் இந்த பட்டனை வாங்கி இருக்கேன் எனக்கு சந்தோசமாக இருக்கிறது என்று கண்கலங்கி பேசியுள்ளார்.

Exit mobile version