Home CINEMA NEWS விக்னேஷ் சிவனின் தாயாரை அவமதித்த நெட்டிசன்க்கு நல்ல பாடம் புகட்டிய விக்னேஷ் சிவன்…!

விக்னேஷ் சிவனின் தாயாரை அவமதித்த நெட்டிசன்க்கு நல்ல பாடம் புகட்டிய விக்னேஷ் சிவன்…!

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தமிழில் சரத்குமார் நடித்த ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர். இந்த படத்தில் வரும் “ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் காத்திருந்த” பாடலின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.

இந்த படத்திற்கு பிறகு இவருக்கு ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து இவர் நிறைய படங்களில் நடித்துள்ள சமயத்தில் நடிகர் சிம்புவுடன் நடித்த படத்தின் போது அவருக்கும் சிம்புவுக்கும் காதல் மலர்ந்தது. அதன்பிறகு அந்த காதல் சில காலங்களிலேயே காலங்களிலேயே முறிவடைந்தது.

அதன்பின் இவர் நடனப்புயல் பிரபுதேவாவின் ஒரு படத்தில் இணைந்து நடித்தபோது அவருக்கு பிரபுதேவாவுக்கும் காதல் மலர்ந்து. இருவரும் பல இடங்களில் ஒன்றாக சேர்ந்து வெளியே வந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளிவந்தன. அவர் பெயரை நயன்தாரா தன் கையில் பச்சை குத்தி உள்ளார்.

அவருடன் திருமணம் செய்துகொள்ள போவதால் சினிமாவை விட்டு விலக கூட நயன்தாரா முடிவு செய்தார். இந்நிலையில் இருவரும் பிரிந்தனர். அதற்குப் பிறகு நயன்தாரா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அதன்பின் சிறிது காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார் நயன்தாரா.மீண்டும் அட்லி இயக்கிய ராஜாராணி படத்தின் மூலம் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நயன்தாரா, பழைய இடத்தை மீண்டும் பிடித்தார். இந்நிலையில் தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த நான்காண்டு காலமாக காதலித்து வருகிறார். விக்னேஷ் சிவன் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

கடந்த அன்னையர் தினத்தன்று விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு வருங்கால அம்மாவாக போகும் என் மனைவிக்கு வாழ்த்துக்கள், என்று கூறி இருந்தார். அதற்கு ஒரு நெட்டிசன் முதலில் உன் அம்மாவிற்கு கூறினாயா, என்று கொச்சை வார்த்தையுடன் கமெண்ட் செய்திருந்தார். இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் விக்னேஸ் சிவன் பதில் கருத்து பதிவிட்டுள்ளர். இதற்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்துள்ளனர்.

Exit mobile version