Home CINEMA NEWS தளபதி விஜயின் 28 வருட கலைப்பயணத்தை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கி கொண்டாடிய திருவாரூர்...

தளபதி விஜயின் 28 வருட கலைப்பயணத்தை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கி கொண்டாடிய திருவாரூர் விஜய் ரசிகர்கள்.

thalapathy vijay 28 year cinema journey

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் என்றால் கண்டிப்பாக அது தளபதி விஜய் தான். ஒரு நேரத்தில் எம்ஜிஆர் ரஜினி படங்களுக்கு எப்படி வரவேற்பு இருக்குமோ அந்த அளவிற்கு தளபதி விஜயின் படங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

இந்தக் கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் படிப்படியாக திறக்க ஆரம்பித்து இயல்பு நிலைக்கு வந்தாலும் வசூல் ரீதியாக எந்த ஒரு படமும் பெரிய வெற்றியை தரவில்லை அதனால் மனம் நொந்து போயுள்ளனர் தியேட்டர் உரிமையாளர்கள். அதுமட்டுமல்லாமல் தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் திரைக்கு வந்தால் தான் மறுபடியும் பழையபடி மக்கள் தியேட்டருக்கு வருவார்கள் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

தளபதி விஜய் நடித்து வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் மாபெரும் சாதனை படைத்து YOUTUBE அதிரச் செய்தது. மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் ஏற்கனவே கைதி என்ற ஒரு பெரிய ஹிட் படத்தை கொடுத்து உள்ளதால் தளபதி விஜயுடன் இணையும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு திரையிட இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. மாஸ்டர் படத்தை கொண்டு வருவதற்கு முன் தளபதி விஜயின் 28 வருட கலைப் பயணத்தை அவரது ரசிகர்கள் மாவட்ட வாரியாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

தளபதி விஜயின் 28 வருட கலைப் பயணத்தை முன்னிட்டு மருதப்பட்டை மாரியம்மன் ஆலயத்தில் திருவாரூர் மாவட்ட தலைமை சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து முதியோர் இல்லத்தில் ஒன்றியம் சார்பாக மதிய உணவு புடவை மற்றும் அரிசி வழங்கி விஜயின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த ஏற்பாடுகள் திருவாரூர் விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் திரு.மதன் அவர்கள் கண்காணிப்பில் நடந்தது.

தனக்கென்று ரசிகர்களை வைத்துக்கொள்ளாமல் இதுபோன்ற நல்ல விஷயங்களில் ரசிகர்களை ஈடுபட வைப்பது பாராட்டக்கூடிய விஷயம்.

Exit mobile version