Home CINEMA NEWS குடிபோதையில் செட்டில் ரகளை …!! உடனடியாக போட்டியாளரை நீக்கிய விஜய் டிவி..!!!

குடிபோதையில் செட்டில் ரகளை …!! உடனடியாக போட்டியாளரை நீக்கிய விஜய் டிவி..!!!

ரியாலிட்டி ஷோக்கள் என்றால் முதன் முதலில் அது விஜய் தொலைக்காட்சியில் தான் ஆரம்பித்தது என கூறும் வகையில் ரியாலிட்டிக்கு பஞ்சம் இல்லாத தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சி.

பிக் பாஸ் சீசன் 6 முடிந்து, அடுத்தது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 தொடங்கியுள்ளது.

மனதிற்கு சந்தோசம் தரவேண்டும் என்றால் குக் வித் கோமாளி பாருங்கள் என்று சொல்லும் அளவிற்கு இந்த சீசனில் எந்த அளவிற்கு சமையல் இருக்கிறதோ அந்த அளவிற்கு நகைச்சுவையும் இருக்கும். இதில் கலந்துகொள்ளும் கோமாளிகள் இந்த நிகழ்ச்சியை மிகவும் சுவாரஸ்யமாக கொண்டு செல்வார்கள். இனி 6 மாதத்திற்கு இந்த குக் வித் கோமாளியை வைத்து விஜய் டிவி பணம் சம்பாதித்து விடும். அந்த அளவிற்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது குக் வித் கோமாளி.

இந்த சீசனில் கோமாளிகளாக பங்கு பெற்ற பலர் தற்பொழுது வெள்ளி திரையில் நடித்து வருகின்றனர். சிவாங்கி, புகழ் ,பாலா போன்றோர் இதில் புகழ் பெற்ற கோமாளிகள்.

இந்த வருடம் சிவாங்கி போட்டியாளராக பங்கேற்க புகழ், பாலா போன்றோர் சினிமாக்களில் பிஸியாக இருக்க கோமாளிகளாக மணிமேகலை, சுனிதா, விஜய் டிவி சீரியல் நடிகை ரவீனா போன்ற புதிய கோமாளிகளும் இந்த சீசனில் களமிறங்கியுள்ளனர்.

இதில் போட்டியாளராக பங்குபெற்ற ஓட்டேரி சிவா மிகவும் குடிபோதைக்கு அடிமையானதால் செட்டில் குடித்து ரகளை செய்வதால் அவரை நீக்கி விட்டு தற்போது விஜய் டிவி பிரபலமான கடி ஜோக் தங்கதுரையை போட்டியாளராக செலக்ட் செய்து உள்ளனர் விஜய் டிவி.

Exit mobile version