Home CINEMA NEWS 36 வயதிற்கு மேல் ஆகிறது நான் தனியாக இருக்கிறேன்..!!! தொகுப்பாளினி DD வெளியிட்ட வீடியோ.

36 வயதிற்கு மேல் ஆகிறது நான் தனியாக இருக்கிறேன்..!!! தொகுப்பாளினி DD வெளியிட்ட வீடியோ.

divyadharsini womens day wishes 2021

டிடி திவ்யதர்ஷினி விஜய் டிவியில் இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. டிடியின் கலகலப்பான பேச்சு ரசிகர்களை கவர்ந்ததால் தொடர்ந்து DD -க்கு ரசிகர்கள் தங்கள் ஆதரவை கொடுத்து வந்தனர்.

DD தனது குடும்ப நண்பர் மற்றும் சிறுவயதிலிருந்து தெரிந்த ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பெற்றோர்கள் பார்த்த பையனை திருமணம் செய்து கொண்ட டிடி திருமணமான சில வருடங்களில் விவாகரத்து பெற்றார்.

திருமணத்திற்கு முன் ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்து வந்த DD திருமணத்திற்குப் பின் துருவ நட்சத்திரம் என்ற விக்ரமின் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் மகளிர் தினமான இன்று நடிகர் நடிகைகள் தங்களது வாழ்த்தை அனைவருக்கும் தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் டிடி தற்பொழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் 36 வயதிற்கு மேல் ஆகிறது நான் தனியாக இருக்கிறேன்.

36 வயதுக்கு மேல் ஆகிறது நான் விவாகரத்து பெற்று உள்ளேன்.

36 வயதுக்கு மேல் ஆகிறது நான் குழந்தை இல்லாமல் இருக்கிறேன்.

36 வயதிற்கு மேல் ஆகிறது Arthritis அவதிப்பட்டு வருகிறேன். இருந்தாலும் நான் சந்தோஷமாக இருக்கிறேன். மகளிர் தின நல்வாழ்த்துக்கள் என்று தளபதி விஜய்யின் மாஸ்டர் குட்டி ஸ்டோரி பாட்டு ஒலிக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Exit mobile version