Home CINEMA NEWS தளபதி விஜயின் மகன் என்ன ஆக போகிறார் தெரியுமா..!!! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.

தளபதி விஜயின் மகன் என்ன ஆக போகிறார் தெரியுமா..!!! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.

sanjayvijay

தளபதி விஜய் தமிழ்நாட்டில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றால் மறுக்கவே முடியாத இடத்தில் விஜய் இருக்கிறார்.விஜய் நடிக்கும் படங்களில் பிசினஸ் பெரிதாக இருப்பதால் விஜய்யின் செல்வாக்கு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. இந்நிலையில் விஜய்யின் மகன் சஞ்சய் அவர்கள் கூடிய விரைவில் ஹீரோவாக நடிக்கப் போவதாக செய்திகள் வந்து கொண்டு இருந்தது.வெளிநாட்டில் படித்துக்கொண்டிருக்கும் சஞ்சய் சென்னை திரும்பியதும் கூடிய விரைவில் நடிக்க இருப்பதாகவும் அந்தப் படத்தை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் தயாரிக்க உள்ளதாகவும் வதந்திகள் வந்துகொண்டிருந்தது.

இந்நிலையில் ஒரு நம்பக தகுந்த தரப்பிலிருந்து செய்தி வந்துள்ளது.விஜய்யின் மகன் சஞ்சய் அவர்கள் ஹீரோவாக நடிப்பதில் விருப்பமில்லை அவருக்கு டைரக்ஷன் துறையில் தான் விருப்பமாம். ஏற்கனவே குறும்படங்களை எடுத்த சஞ்சய் சினிமா துறையில் டைரக்டராக வேண்டும் என்பதே அவருடைய ஆசையாம்.

அதனால் தமிழில் முன்னணி இயக்குனரான சங்கர் அல்லது மணிரத்தினத்தின் துணை இயக்குனராக பணிபுரிவார் என்று கூறப்படுகிறது . விரைவில் தளபதியின் மகன் இயக்குனராக பார்க்க சந்தோஷமாக இருந்தாலும் தளபதிக்கு அடுத்த இடத்தில் அவரது மகன் வர வேண்டாமா என்று ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம். தளபதி மகன் ஹீரோவா அல்லது இயக்குனரா என்று.

Exit mobile version