Home CINEMA NEWS கட்சி பெயர் தான் என்னுடையது..!! ஆனால் கட்சி என்னுடையது அல்ல..!! விஜய்..!!

கட்சி பெயர் தான் என்னுடையது..!! ஆனால் கட்சி என்னுடையது அல்ல..!! விஜய்..!!

தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டேதான் போகிறது. சமீபத்தில் விஜய்யை வருமான வரித்துறையினர் மாஸ்டர் படப்பிடிப்பின்போது அழைத்துச் சென்றார்கள். வருமான வரித் துறையினரின் ரெய்டுக்கு பிறகு அடுத்த நாள் விஜய்யின் சூட்டிங் இங்கு நடக்கக்கூடாது என்று நெய்வேலியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த செய்தி அறிந்த விஜய் ரசிகர்கள் படையெடுத்து நெய்வேலி சென்றனர். அப்போது விஜய் ரசிகர்களுக்கும் பாஜகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது அதனை தொடர்ந்து மக்கள் விஜய் பார்ப்பதற்காக வெளியூரிலிருந்து வந்து காத்திருந்தனர். தனது ரசிகர்களை பார்த்து கையசைத்து தன் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார் தளபதி விஜய். நெய்வேலியில் விஜய்க்கு கூடிய கூட்டத்தை பார்த்து ஒரு சில அரசியல் கட்சிகளுக்கே அதிர்ச்சி ஆனது. . ஒரு நடிகருக்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இவ்வளவு ரசிகர்களா என்று ஆச்சரியப்பட வைத்தது.

சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று விஜயின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் கட்சி தொடங்கப் போவதாகவும் அந்த கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து இணையத்தில் விஜய் கட்சி ஆரம்பிக்கிறார் நடிகர் கமல் உடன் கூட்டணி என்றெல்லாம் செய்திகள் பரவத் தொடங்கியது.

தற்பொழுது அந்த செய்தியை மறுத்து விஜய் அவசர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். எனது தந்தை கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்பது ஊடகத்தின் வாயிலாக நான் தெரிந்துகொண்டேன். எனக்கும் அந்தக் கட்சிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. எனது ரசிகர்கள் யாரும் அந்தக் கட்சியில் இணைய தேவையில்லை. மேலும் எனது புகைப்படங்கள் அல்லது அகில இந்திய விஜய் ரசிகர்கள் பெயரையோ பயன்படுத்தினால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார் விஜய்.

உண்மையில் என்ன நடந்தது சினி வட்டாரத்தில் கேட்க சந்திரசேகர் அவர்களுக்கும் விஜய்க்கும் ஏற்கனவே பல ஆண்டுகளாக நிறைய பிரச்சினைகள் இருந்து உள்ளதாம். சந்திரசேகர் விஜயின் படங்களில் குறுக்கிடுவதும் அதுமட்டுமல்லாமல் விஜயை வைத்து அரசியல் செய்யப் பார்த்ததாகவும் கூறுகிறார்கள். இவரின் ஒரு சில நடவடிக்கைகள் பிடிக்காததால் விஜய் சரியாக தந்தையிடம் பேசிக் கொள்வது இல்லையாம். ஏற்கனவே விரிசல் விழுந்து இருக்கும் உறவில் இந்த செயல் இன்னும் பெரிய விரிசலை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள் சினிமா வட்டாரத்தில்.

Exit mobile version