Home NEWS நடமாடும் காய்கறி வாகனங்கள் உங்கள் பகுதிக்கு வரவில்லை என்றால் உடனே புகார் கொடுக்கலாம்..!!! புகார் எண்...

நடமாடும் காய்கறி வாகனங்கள் உங்கள் பகுதிக்கு வரவில்லை என்றால் உடனே புகார் கொடுக்கலாம்..!!! புகார் எண் இதோ..!!!

chennai corporation vegetable vehicle

தமிழகம் முழுவதும் ஊரடங்கு கடைபிடித்து வரும் நிலையில் மக்கள் காய்கறி கடைகள் இல்லாததால் சிரமப்படுவார்கள் என்பதை நன்கு அறிந்த அரசு மக்களுக்கு சிரமமில்லாமல் இருப்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவெடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. அதில் ஒன்றாக நடமாடும் காய்கறி வாகனங்களை அனைத்து பகுதிகளுக்கும் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி மற்றும் வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக 1,000 நடமாடும் காய்கறி வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.

காய்கறிகள் விற்பனை அதிக விலைக்கு விற்பதை தடுப்பதற்காகவும் மக்களுக்கு காய்கறிகள் இந்த ஊரடங்கு நேரத்தில் முறையாக கிடைப்பதற்கும் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது சென்னை மாநகராட்சி. சென்னை மாநகராட்சியின் இந்த செயலை பார்த்து பிரதமர் மோடி அவர்களே பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்துள்ள நடமாடும் காய்கறி வாகனங்கள் உங்கள் பகுதிக்கு வரவில்லை என்றால் அது குறித்து புகார் அளிக்க எண் ஒன்றை அறிவித்து உள்ளார்கள்.

புகார் எண்: 044- 45680200

இந்த எண்ணுக்கு தொலைபேசி மூலம் அழைத்து புகார் கொடுத்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் சென்னை மாநகராட்சி ஆணையர். நடமாடும் காய்கறி வாகனம் வருகை, விலை குறித்த தகவல்களை 9499932899 எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.

அது போல மூன்று சக்கர வாகனம்/தள்ளுவண்டி மூலம் காய்கறிகள் மற்றும் பழ வியாபாரம் செய்பவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினால் பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 044-45680200 என்ற தொலைபேசி மற்றும் 9499932899 என்ற கைப்பேசி எண் மூலம் தகவல் தெரிவிக்கலாம்.

Exit mobile version