Home NEWS என்னது.. இளநீரில் மட்டும் இத்தனை வகையா..? இளநீரின் பயன்கள் இதோ.

என்னது.. இளநீரில் மட்டும் இத்தனை வகையா..? இளநீரின் பயன்கள் இதோ.

இயற்கை நமக்கு தந்த கொடை இளநீர். இளநீர் இல்லாத சத்துக்களை இல்லை என்று சொல்லும் அளவிற்கு இனம் கண்டறிந்த தாது உப்புக்கள் மட்டுமின்றி கூற இயலாத உயிர் சத்துக்களையும் கொண்ட உயிர் நீர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பருகும் இந்த இளநீர் மருத்துவ குணங்களையும் கொண்டது.

இளநீரை தொடர்ந்து அதிகாலை நேரத்தில் அருந்தி வர உடல் குளிர்ச்சி உண்டாகும். சிறுநீர் கட்டை நீக்குவதோடு, பித்த வாந்தி பேதி போன்றவற்றையும் குணமாக்கும்.
ஒவ்வொரு வகையான இளநீருக்கும் ஒவ்வொரு மருத்துவத் தன்மை உண்டு அவைகளில் சிலவற்றைக் காணோம்

செவ் இளநீர்
நடப்பதால் உண்டாகும் இறைப்பு, நீர்வேட்கை, அயர்வு, அதிபித்தம் மற்றும் கப நோய்களை குணமாக்கும்.

புது இளநீர்
மரத்திலிருந்து வெட்டியவுடன் அருந்தும் இளநீர். இது அதிகப்படியான பித்தம் நீக்கும்.

பழைய இளநீர்
மரத்திலிருந்து இறக்கி பல நாள் வைத்திருந்து அருந்துவது. இது சளி பிடிப்பதோடு தலை பாரத்தையும் உண்டாக்கும்.

பச்சை இளநீர்
பச்சை இளநீரை தொடர்ந்து அருந்துவதால் அதிகப்படியான கபம், யானை சொரி நாள்பட்ட சுரம், கண் நோய், மேகநோய், கிருமிகளை நீக்கி குணப்படுத்தும்.

அடுக்கிள இளநீர்
படுக்கும் முன்பு அடைக்கிள இளநீரை அருந்துவதால் கபதோஷம் மலக்குடல் சம்பந்தமான கிருமிகள் நீங்கும்.

மஞ்சள் கச்சி இளநீர்
இந்த இளநீரை அருந்தி வர சோகை, கபம் அதிகமாகுதல் பித்த தோஷம் நீங்க பெறலாம்.

கருவிள நீர்
உடல் பொலிவு உண்டாகும். கபம் அதிகமாகுதல், புழுவைத்த கரப்பான் குணமாகும்.

கேணி இளநீர்
தீராத நீர் வேட்கை, காய்ச்சல், மண்டாகினி, கரப்பான், ரத்தமேகம் மலர் கிருமிகள் நீங்கும்.

சோற இளநீர்
ரத்த வண்ணத்தில் இருக்கும். இது உடல் அழகை தரும் நுண்கிருமிகள் மற்றும் வயிற்றுப் பிரச்சனை நீக்கும். அதிகமான பயன்படுத்தினால் நான் துடிப்பு சொற்கள் குழறி பேச நேரிடும்.

குண்டக்கச்சி இளநீர்
நாட்பட்ட மலச்சிக்கல், நீர்வேட்கை, நீக்குவதோடு பசியெடுக்க செய்யும் இவ்விளநீரில் சுவை இருந்திடாது.

உணவிற்கு முன் அருந்தும் இளநீர்
பசி நீங்கி போகும் காலையில் உணவிற்கு முன்பு அருந்த குன்ம நோய் உண்டாகும் மாலை உணவிற்கு முன்பு அருந்த உடல் கிருமிகள் அழியும்.

ஆயிரங்கச்சி இளநீர்
இவ்விளநீர்க்கு வெப்பத்தை தணிக்கும் தன்மை உண்டு. நன்றாக பசி எடுக்கும் குன்மம் வாத கபம் நமைச்சல் கீழ் விதனம் குணமாக்கும்.

காய்ந்து ஆரிய இளநீர்
நன்றாக சுடவைத்து ஆற வைத்த இளநீரானது காசம் மற்றும் கபத்தை நீக்கும். தீராத தாகம் சுரம் நீக்கும்.

கௌரி பாத்திரை
இவ்வக இளநீருக்கு ஒட்டினத்தை விலக்கும் தன்மை உண்டு. இவ்வாறு ஒவ்வொரு வகையிலிருக்கும் தனி பண்பும் பலனும் உண்டு என்பதால் தக்க முறையில் பயன்படுத்தி பலன் பெறுவோம்.

Exit mobile version