Home CINEMA NEWS 100 கிராமங்களில் அக்னி குண்டம் வளர்த்து சூர்யாவின் படத்தை எரிக்க போகிறோம் பொங்கி எழும் வன்னியர்...

100 கிராமங்களில் அக்னி குண்டம் வளர்த்து சூர்யாவின் படத்தை எரிக்க போகிறோம் பொங்கி எழும் வன்னியர் சங்க மாநில துணை தலைவர் ம க ஸ்டாலின்.

suriya jaibhim issue court

சூர்யாவின் ஜெய் பீம் பழங்குடியின மக்கள் படும் அவஸ்தையை உலகிற்கு எடுத்து கூறிய படம். ராசா கண்ணு என்ற ஒருவர் எந்த ஒரு குற்றமும் செய்யாமல் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட உண்மை சம்பவத்தை அப்படியே கண்முன் நிறுத்தி ரசிகர்கள் மனதை கலங்கடித்த படம்.

சூர்யாவின் இந்தப் படத்திற்கு ஏகப்பட்ட விருதுகள் குவியும் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் எந்த ஒரு விருதும் இந்த படத்திற்கு கொடுக்கக்கூடாது என்று வன்னியர் அமைப்புகள் போராடி வருகின்றனர். காரணம் ஒரு சில கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகளில் வன்னியர்களின் மனதை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாக குறிப்பிட்டு வந்தனர்.

எதற்காக வன்னியர்களை தவறாக சித்தரித்து படத்தை எடுக்க வேண்டும் எதற்காக அக்னிகுண்டம் உள்ள காலண்டரை காட்ட வேண்டும் என்று வன்னியர்கள் அனைவரும் தங்களது கருத்தை தெரிவித்து வந்தனர். சூர்யா மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று கோரிக்கையும் முன்வைத்தனர்.

பிரச்சனைகள் நாளுக்கு நாள் பெருசாக ஐந்து துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் சூர்யாவின் டி நகர் வீட்டில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். வேண்டுமென்றே இது போன்ற காட்சிகள் நாங்கள் அமைக்கவில்லை யாரையாவது இந்தப்படம் புண்படுத்தியிருந்தால் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று படத்தின் இயக்குனர் ஞானவேல் அவர்கள் தெரிவித்திருந்தார்.

தற்பொழுது இந்த படத்தை தயாரித்த சூர்யா மற்றும் ஜோதிகா மீது வன்னியர் சங்கம் சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது அதில் வன்னியர் சங்கத்தின் தலைவர் அருள்மொழி அவர்கள் கூறியிருப்பது அவதூறு பரப்புதல் இரு சமூகங்களுக்கிடையே வன்முறையை சொல்லுதல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

சிதம்பரம் கோர்ட்டுக்கு சூர்யா வரும் பொழுது அவரை உதைத்து ஒரு லட்சம் தட்டிப் போக போகிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் முன்னணி சமூக வலைதளம் பக்கத்திற்கு நெட்டிசன் ஒருவர் டேக் செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அடுத்த மாதம் 100 கிராமங்களில் அக்னி குண்டம் வளர்த்து சூர்யா படத்தை அதில் எரிக்க போகிறோம் என்று வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Exit mobile version