Home CINEMA NEWS சென்னையில் பிரம்மாண்ட BOTIQUE துணிக்கடை ஆரம்பித்த வனிதா விஜயகுமார்..!!! மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் வனிதா...

சென்னையில் பிரம்மாண்ட BOTIQUE துணிக்கடை ஆரம்பித்த வனிதா விஜயகுமார்..!!! மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் வனிதா உறுதிமொழி.

vanitha vijayakumar new botique shop vanitha vijaykumar shopping

வனிதா விஜயகுமார் பிரபல நடிகர் விஜயகுமார் அவர்களின் மகள். வனிதா முதன் முதலில் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகம் ஆனது சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தான்.

சந்திரலேகா படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து ஏகப்பட்ட தமிழ் படங்களில் நடித்து வந்தார் வனிதா. சில பர்சனல் பிரச்சனைகளுக்காக சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் சில ஆண்டுகள் சில படங்களுக்கு காஸ்ட்டியூம் டிசைனராக பணியாற்றி வந்தார்.

சமீபத்தில்தான் 3வது கணவரான பீட்டர் பால் என்பவரை விவாகரத்து செய்தார் வனிதா. வனிதாவை பொறுத்தவரை எது பேசினாலும் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்ய ஆரம்பித்தார்கள் அவரது ரசிகர்கள். வனிதாவின் போல்டான பேச்சு சிலருக்கு பிடித்திருந்தது.

குறிப்பாக லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுடன் வனிதா போட்ட சண்டை சமூக வலைத்தளத்தில் வயதில் வீடியோவாக ஒரு நேரத்தில் இருந்தது. குக் வித் கோமாளி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வனிதா மீண்டும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடி வந்த வனிதா திடீரென்று அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். தற்பொழுது வனிதா பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து பிக்கப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

வனிதா சென்னையில் பிரம்மாண்டமாக ஒரு புதிய கடை ஒன்றை திறந்துள்ளார் அதில் பெண்களுக்கு தேவையான ஆடைகள் மற்றும் மேக்கப் கிட் போன்றவைகளை விற்க போகிறாராம் இந்தக் கடையின் பொறுப்பை தனது தோழியிடம் கொடுத்துவிட்டு சினிமாவிலும் தொடர்ந்து நடிப்பாராம். இதுகுறித்து வனிதா அவர்கள் கூறியது இதோ.

Exit mobile version